இரத்தினபுரி பொலிஸ் பிரிவிலுள்ள லெல்லோபிட்டிய, பத்துல்பால எனுமிடத் தில் நேற்று சனிக்கிழமை காலை 10.20 மணிக்கு மின்சாரம் தாக்கி ஸ்தலத்திலேயே இரு சிறுமிகள் உயிரிழந்ததுடன், ஒரு பிள்ளை ஆபத்தான நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் அவசரப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.
வெளிமலுவ வித்தியாலயத்தில் கல்வி கற்கும் சகுனி உமேஷா (9 வயது) மதுக்கா சாரங்க (9 வயது) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.
பாத்தக்கடை பெளத்த வித்தியாலயத்தில் கல்விகற்கும் பியூமி சந்திரலதா என்ற மாணவியே படுகாயமடைந்துள்ளார்.
வீட்டருகிலுள்ள பாரிய றம்புட்டான் மரத்தில் ஏறி றம்புட்டான் பறிக்க முடியாத நிலையில், அருகிலுள்ள தேசிக்காய் மரத்தில் மூவரும் ஏறி இரும்புக் கம்பியின் (என்டானா பைப்) உதவியுடன் றம்புட்டான் பறித்துள்ளனர்.
பாரிய முயற்சி செய்தும் றம்புட்டான் பறிக்க முடியாத நிலையில், மூவரும் ஒன்றாக (எழுமிச்சை மரத்திலிருந்தவாறே) இரும்புக் கம்பியின் உதவியுடன் றம்புட் டானைப் பறித்துள்ளனர்.
இவ்வாறு பறிக்கும் போது இரும்புக் கம்பி தவறி அருகிலுள்ள அதியுயர் மின்னழுத்த கம்பியில் பட்டதும் அதனூடாக மின்சாரம் பாய்ந்து மேற்படி மூவரும் ஒருவர் பின் ஒருவராக கீழே விழுந்துள்ளனர். இவ்வேளையில் தேசிக்காய் மரமும் தீப்பற்றி எறிந்துள்ளது.
இதனை கேள்வியுற்ற வீட்டிலுள்ளவர்கள் வெளியில் வந்து பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்து, இவர்களை காப்பாற்ற முயற்சி செய்த போது அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்து சிறுகாயத்துக்குள்ளாகியுள்ளனர்.
இதன் பின் அக்மனையில் வீதியில் சென்றுகொண்டிருந்த மின்சார ஊழியர்கள் பெரும்முயற்சி செய்து இம்மூவரையும் மின்சாரத்திலிருந்து மீட்டுள்ளனர்.
இதன்போது, இருவரும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்தவர் இரத்தினபுரி வைத்தியசாலையில் சிச்சை பெற்று வருகின்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக