15 ஆகஸ்ட், 2010

பொன்சேகாவுக்கு எதிரான தீர்ப்பு: ஜனாதிபதியினால் அங்கீகாரம்

முன்னாள் ஜெனரல் சரத் பொன்சேகா வுக்கு எதிராக முதலாவது இராணுவ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கீகரித்துள்ளார்.

இராணுவ சேவையிலிருந்துகொண்டு அரசியலில் ஈடுபட்டாரென்ற குற்றச்சாட்டு தொடர்பில் முதலாவது இராணுவ நீதி மன்றம் விசாரணை செய்தது. இதில் சரத் பொன்சேகா குற்றவாளியென நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன் அவரின் இராணுவ தர நிலை ஜனாதிபதியின் அங்கீகாரத்துடன் வாபஸ்பெறப்பட வேண்டுமென்றும் அறிவித்திருந்தது. இந்நிலையில் பொன்சேகா வுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பினை ஜனாதிபதி நேற்று அங்கீகரித்ததாக இராணுவப் பேச் சாளர் கேர்ணல் துமிந்த கமகே தெரிவித்தார்.

இதன்படி சரத் பொன்சேகா இராணுவ சேவையில் இருந்த போது வழங்கப்பட்ட தரநிலை மற்றும் கெளரவ விருதுகள் அனைத்தையும் இழந்தவராகின்றார்.

சரத் பொன்சேகாவுக்கு எதிரான குற் றச்சாட்டுகளை விசாரணை செய்யவென இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் பரிந்துரைக்கமைவாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த 2010 மார்ச் மாதம் 11ஆம் திகதி முதலா வது இராணுவ நீதிமன்றத்தை நியமித்தார். அதன் முதலாவது அமர்வு மார்ச் 16ஆம் திகதி ஆரம்பமானது.

சரத் பொன்சேகா அரசியலில் ஈடுபட் டமை தொடர்பான இராணுவ நீதிமன்ற விசாரணையின் போது அமைச்சர் ஜொன்ஸ்ரன் பெர்னாண்டோ, காமினி அபேரட்ன, லக்ஷ்மன் செனவிரட்ன, மேஜர் ஜெனரல் ஏ.டபிள்யூ.கே.சீ.டி. சில்வா ஆகியோர் சாட்சியமளித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக