18 ஜூன், 2010

டூடில் காஸ் நிறுவன 51வீத பங்குகளை அரசு கொள்வனவு





ஷெல் காஸ் நிறுவனம் அதன் விநியோகங்களை இலங்கையிலும் ஆசியாவிலும் நிறுத்திக் கொள்ளப் போவதாக அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.

இதனையடுத்து ஷெல் காஸ் லங்கா நிறுவனத்தின் 51% பங்குகளைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

உலகளாவிய ரீதியில் வர்த்தகக் கூட்டமைப்பை மறுசீரமைக்கும் திட்டத்தின் ஓர் அங்கமாகவே இலங்கையில் எரிவாயு விநியோகத்திலிருந்து விலகி நிற்கப் போவதாக குறித்த நிறுவனம் அறிவித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்ச ரவை ஆராய்ந்து தீர்மானித்ததற் கமைய இலங்கை வங்கியை நிதி ஆலோசகராகவும் மேலும் ஐந்து அமைச்சுகளின் செயலாளர் களையும் கொண்ட குழு வொன்று நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்கள த்தில் நேற்று (17) நடைபெற்ற வாராந்த செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். சர்வதேச ஷெல் பெற்றோலியக் கம்பனியுடன் பேச்சுவார்த்தை நடத்தி 51% பங்குகளைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நிதி ஆலோசகராக இலங்கை வங்கி செயற்படுவதுடன் பேச்சுவார்த்தைக் குழுவில் மின்சக்தி எரிசக்தி, பெற்றோலிய வளம், பொருளாதார அபிவிருத்தி உள்ளிட்ட ஐந்து அமைச்சுகளின் செயலாளர்கள் நியமிக்கப்பட்டு ள்ளதாகவும் அமைச்சர் குறிப்பி ட்டார்.

ஷெல் காஸ் நிறுவனம் விலை அதிகரிப்புக்காக பல தடவை அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன்வைத்திருந்தது. எனினும் நுகர்வோர் அதிகார சபையின் விலைச் சூத்திரத்திற்கு அமைய விலை நிர்ணயம் செய்தது. ஆனால், இதனையும் மீறி விலை அதிகரிப்பு மேற்கொண்ட போது உச்ச நீதிமன்றத்தின் ஊடாக அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. இதேவேளை, 2005 ஆம் ஆண்டு பதவிக்கு வந்ததும் அரச சொத்துக்களைத் தனியார் மயப்படுத்துவதில்லை என்ற கொள்கையை ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

அதேநேரம், தனியார் மயப்படுத்தப்பட்ட அரச நிறுவனங்களை மீளப்பெறுவதெனத் தீர்மானிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர் ரம்புக்வெல்ல, அதன் ஓர் அங்கமாகவே ஷெல் காஸ் நிறுவனத்தின் 51% பங்குகளைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கையும் அமைந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக