மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணைகளை நடத்த அரசாங்கத்தின் ஆணைக்குழு போதுமானதென ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிற்கு பூரண அதிகாரங்கள் காணப்படுவதாகவும், வேறு ஓர் சர்வதேச ஆணைக்குழுவின் விசாரணைகள் தேவையில்லையெனவும் அவர் கூறியுள்ளார். பாராளுமன்ற சட்டத்தின் அடிப்படையில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளை நடாத்துவதற்கு தேவையான சகல அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இருதரப்பினராலும் உரிமைமீறல்கள் இடம்பெற்றிருக்கலாமெனவும், விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனவும் பல்வேறு மனிதஉரிமை அமைப்புக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. மற்றுமொரு ஆணைக்குழு விசாரணை நடத்தினால் குழப்பநிலை உருவாகும். உரிய ஆதாரங்களின்றி இவ்வாறான விசாரணைகளை நடத்த சர்வதேச அமைப்புக்கள் வலியுறுத்தக்கூடாது. குற்றாவாளிகளை கண்டுபிடிப்பதனை மட்டும் நோக்காகக் கொண்டு ஆணைக்குழு உருவாக்கப்படவில்லை. ஏனைய விடயங்கள் தொடர்பிலும் ஆணைக்குழு கவனம் செலுத்தும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக