29 மே, 2010

கீரிமலை வைரவர் ஆலயத்தில் பொங்கலிட ஒருசிலருக்கே அனுமதி

கீரிமலை கவுனாவத்தை ஆலயத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற வருடாந்த பொங்கல் நிகழ்விலும் மற்றும் வேள்வியிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள். அதிகாலை முதல் மக்கள் யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வேள்வி நடைபெற்ற இடத்தில் கூடினார்கள்.

ஆலயம் உயர் பாதுகாப்பு வலயத்தில் இருப்பதனால் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக கவுனாவத்தை வைரவர் ஆலயம் அமைந்துள்ள இடத்தில் மக்கள் சென்று தமது நேர்த்திக் கடனை நிறைவேற்ற அனுமதிக்காத நிலைமை தொடர்ந்து காணப்படுகின்றது.

இந்த வகையில் இவ்வாண்டும் ஆலய பிரதம குரு உட்பட மட்டுப்படுத்தப்பட்ட மக்கள் அங்கு பொங்கலிடவும் ஒரு கடா, ஒரு கோழி வெட்டவும் அனுமதிக்கப்பட்டது.

ஏனைய பல நூற்றுக்கணக்கான கடாக்கள் மற்றும் கோழிகள் ஆலயம் அமைந்துள்ள இடத்திலிருந்து சுமார் இரண்டு கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள தனியார் காணியொன்றில் வெட்டப்பட்டன. கடாக்கள் மிகவும் கோலாகலமாக உழவு இயந்திரங்களில் ஏற்றப்பட்டு, மாலைகள் அணிவிக்கப்பட்டு அதிகாலை 3.30 மணி முதல் கடா வெட்டப்படும் இடத்திற்குக் கொண்டு வரப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக