29 மே, 2010

பிரிட்டனில் குடியேற கட்டுப்பாடு: புதிய அரசு முடிவு

நாடுகளிலிருந்து பிரிட்டனில் குடியேறுவோர் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த புதிதாக பொறுப்பேற்றுள்ள டேவிட் கேமரூன் அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் அல்லாத பிற நாடுகளிலிருந்து அதாவது இந்தியா போன்ற நாடுகளிலிருந்து பிரிட்டன் குடியுரிமை கோருவோரைக் கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளது. இத்தகவலை குடியேற்றத்துறை அதிகாரி டேமியன் கிரீன் தெரிவித்துள்ளார்.

÷பிரிட்டன் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.

÷2009-ம் ஆண்டில் பிரிட்டனில் நிரந்தர குடியுரிமை கோரி குடியேறியவர்களில் முதலிடத்தில் இந்தியர்கள் உள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் 26,535 பேர் பிரிட்டனில் குடியேறியுள்ளனர். இது ஒட்டுமொத்தமாக குடியேறியவர்களுடன் ஒப்பிடுகையில் 13 சதவீதம் அதிகமாகும். ஆனால் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 124 சதவீதம் அதிகமாகும்.

÷இந்தியர்களுக்கு அடுத்தபடியாக பாகிஸ்தானிலிருந்து குடியேறியவர்களின் எண்ணிக்கை 20,945 மற்றும் வங்கதேசத்தவர்களின் எண்ணிக்கை 12,040 ஆகும்.

÷1990-ம் ஆண்டுகளில் கடைப்பிடிக்கப்பட்டதைப் போன்று கடுமையான கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவதன் மூலம் பிரிட்டனில் குடியேறுவோரின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியும் என்று நம்புவதாக கிரீன் குறிப்பிட்டார்.

÷மாணவர்கள், பணியாளர்கள், திருமணம் முடிந்து இங்கு குடியேறுவோர் என பல தரப்பினரையும் எவ்விதம் கட்டுப்படுத்தப் போகிறோம் என்பதை வரும் வாரங்களில் பார்க்கலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

÷அரசு கொண்டு வர உள்ள இத்தகைய கட்டுப்பாடுகள் நடைமுறை சாத்தியமில்லாதது. இதை எதிர்த்து நீதிமன்றம் செல்லப் போவதாக பிரிட்டனில் பணிபுரியும் பிற நாட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக