29 மே, 2010

வவுனியாவில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள்-


வவுனியாவில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு பல மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வவுனியா மாவட்ட அரசஅதிபர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். ஹேன்ரிப் திட்டத்தின் ஊடாக 43கிராமங்கள் அடையாளம் காணப்பட்டு 100மில்லியன் ரூபா செலவில் நெடுங்கேணி பகுதிக்கு நீர்விநியோக திட்டத்தை அமுல்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை 43மில்லியன் ரூபாய் செலவில் நவீனசந்தை மற்றும் பஸ் நிலையமும், 23மில்லின் ரூபாய் செலவில் பயிற்சி நிலையமொன்றும், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கு அரிசி ஆலையொன்றும் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே வவுனியா பஸ் நிலையத்தினுள் தனியார் வாகனங்கள் செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. வவுனியா நகரசபையின் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி உறுப்பினர் எஸ்.குமாரசாமி இவ்விடயத்தை கவனத்திற்கு கொண்டுவந்தையடுத்து தடை நீக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக