28 மே, 2010

அச்சமும் பீதியுமின்றி வாழ்கிறோம்’; யாழ். மக்கள் நன்றி தெரிவிப்பு

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் வாழும் மக்களுக்குக் கிடைக்கும் சகல வசதிகளும் தமக்கும் தற்போது கிடைத்து வருவதாக யாழ்ப்பாண மக்கள் தெரிவிக் கிறார்கள்.

அதேபோன்று, அச்சமும் பீதியும் இன்றி வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தித் தந்த ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அந்த மக்கள் கூறுகிறார்கள்.

இலங்கை தகவல் தொடர்பாடல் முகவர் நிலையம் (ஐஇபஅ) அண்மையில் யாழ் நூலகத்தில் நடத்திய பயிற்சி நெறியிலும் கண்காட்சியிலும் கலந்துகொண்ட ஆசிரிய, ஆசிரியைகளும் மக்களும் இந்தக் கருத்தைத் தெரிவித்தனர். இதற்கென அரச தகவல் மையம் (1919), இ-குடிசன மதிப்பீடு, விசேடமாக விவ சாய சமூகத்தை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள www.gowiy .lkஇணையத்தளம், மக்களுக்கு சுகாதார தகவல்களை வழங்குவதற்கான இணையத்தளம் உள்ளிட்ட இணையங்கள் பயன்படுத்தப்பட்டன.

மக்களின் வாழ்வாதாரத் தகவல்களைத் தொடர்பாடல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டுள்ள மென்பொருள்களையும் தகவல், தொழில்நுட்பங்களையும் மக்கள் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. மக்களின் அன்றாட அலுவல்களை இலகுபடுத்திக்கொள்வதற்குத் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பற்றியும் விரிவாக விளக்கமளிக்கப் பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக