16 மே, 2010

இலங்கை போரில் 2.6 லட்சம் வீடுகள் சேதம்

:

இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிக் கட்டப் போரின் போது ஈழத்தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்குப் பகுதியில் 2 லட்சத்து 60 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்ததாக செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.

இந்த வீடுகள் அனைத்துமே மனிதர்கள் வசிக்க முடியாத அளவுக்கு உருக்குலைந்துவிட்டன. சில வீடுகள் மேற்கூரை மட்டும் இடிந்துள்ளன. சில வீடுகள் மேற்கூரையும், சுவர்களும் இடிந்து கிடக்கின்றன. இவற்றை சீரமைத்தால்தான் குடியிருக்க இயலும் என்றும் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

வடக்குப் பகுதியில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பகுதியில் மட்டுமே இதுவரை தமிழர்கள் மறுகுடியமர்த்தப்பட்டுள்ளனர். வடக்குப் பகுதியில் பெரும்பகுதியில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுவிட்டன. இந்த பகுதிகள் மக்கள் வசிப்பதற்கு பாதுகாப்பானதாக மாற்றப்பட்டுள்ளன. மற்ற பகுதிகளிலும் கண்ணிவெடிகளை அகற்றும் பணி துரிதமாக நடந்து வருகின்றது.

வடக்கு மாகாணத்தின் கிழக்கு கடலோரப் பகுதியில் புதைத்து வைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றி அப்பகுதியை பாதுகாப்பானதாக மாற்றவும் இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக