22 ஏப்ரல், 2010

நெடுங்கேணி, ஒலுமடு மற்றும் மல்லாவி பகுதிகளில் கிணறுகளை துப்புரவு செய்து கொடுக்கும் பணியில் புளொட் உறுப்பினர்கள்-




புளொட் அமைப்பின் வேண்டுகோளுக்கமைய பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்புடன் பெறப்பட்ட நான்கு நீர் இறைக்கும் இயந்திரங்கள் வடக்கில் மீள்குடியமர்ந்த மக்களின் கிணறுகளை சுத்தம் செய்யும் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தவகையில் அவற்றைக் கொண்டு மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள நெடுங்கேணி, ஒலுமடு, பெரியமடு பிரதேசங்களிலுள்ள கிணறுகளைத் துப்புரவு செய்யும் பணிகளில் புளொட் உறுப்பினர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கிணறுகளில் நீர் இறைத்து துப்புரவு செய்யும் நடவடிக்கைகள் நெடுங்கேணி, ஒலுமடு பிரதேசம் மாத்திரமன்றி ஏனைய பிரதேசங்களிலும் இடம்பெற்று வருகின்றன. இந்த வகையில் இன்னுமொரு நீர் இறைக்கும் இயந்திரம் மல்லாவிப் பகுதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டு அப்பகுதியிலுள்ள பாண்டியன்குளம், தேராங்கண்டல், ஐயங்குளம் உள்ளிட்ட பல பிரதேசங்களிலும் பொதுமக்களின் கிணறுகளை இறைத்துக் கொடுத்து துப்புரவு செய்யும் பணிகளில் புளொட் உறுப்பினர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மல்லாவி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் வேண்டுகோளுக்கிணங்க மேற்படி நீர் இறைக்கும் இயந்திரங்களில் ஒன்று வைத்திய அதிகாரியிடம் கையளிக்கப்பட்டிருப்பதுடன். அப்பிரதேசத்திலுள்ள கிணறுகளிலும் தண்ணீர் இறைக்கும் பணிகள் இடம்பெற்று கிணறுகள் துப்புரவாக்கப்பட்டு வருகின்றன. புளொட் உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் இப்பணிகளை புளொட் முக்கியஸ்தரும், வவுனியா நகரசபை எதிர்க்கட்சித் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன் தலைமையிலான பிரதிநிதிகள் நேரடியாகப் பார்வையிட்டு தேவையான உதவிகளைச் செய்து வருவதுடன், நீர் இறைக்கும் இயந்திரங்களுக்கான எரிபொருள் உள்ளிட்ட மேலதிக தேவைகளையும் வழங்கி வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் நடுப்பகுதியிலிருந்து புளொட் உறுப்பினர்கள் வடக்கில் மீள்குடியமர்ந்த மக்களுக்காக கிணறுகளை இறைத்து துப்புரவு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக