17 ஏப்ரல், 2010

40 பேரைக் கொண்ட சிறிய அமைச்சரவை அமையும் சாத்தியம் :

சுசில் நம்பிக்கை
எண்ணிக்கையை குறைக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எமது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கும் என எதிர்பார்ப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.

அமைச்சரவை குறைப்பு விடயம் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம்ஜயந்த இது தொடர்பில் மேலும் கூறுகையில்,

"மக்களின் அமோக ஆதரவை பெற்றுக் கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் அடுத்த அமைச்சரவை நிச்சயம் சிறியதாகவே அமையும் என்று நாங்கள் தேர்தல் காலத்தில் கூறிவந்தோம்.

அதற்கேற்ப இம்முறை எமது அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை குறைவானதாக அமையும் என்பதனை பொறுப்புடன் கூறுகின்றோம். 35 இலிருந்து 40 வரையான அமைச்சரவை அமைச்சர்களே நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் என்ற வகையில் என்னால் அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை துல்லியமாக கூற முடியாது. ஆனால் அமைச்சர்களின் எண்ணிக்கை குறையும் என்பதனை உறுதியாக கூற முடியும்.

மேலும் அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகள் ஆதரவு வழங்கும் என்று முழுமையாக நம்புகின்றோம்.

அதேவேளை, பெரும்பாலும் ஒவ்வொரு மாவட்டமும் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் வகையில் அமைச்சரவை அமைச்சுப் பதவி ஒன்று வழங்கப்படலாம்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக