17 ஏப்ரல், 2010

தமிழ் மக்கள் இன்னமும் அரசியலில் தெளிவுறவில்லை : கிழக்கு மாகாண முதலமைச்சர்



வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இன்னமும் அடைய முடியாத இலக்குகளை நோக்கிச் சிந்திப்பதாகவும் அல்லது அரசியலில் இன்னும் தெளிவுறவில்லை என்றும் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சந்திரகாந்தன் தெரிவித்தார்.

வீரகேசரி இணையத்தளத்துக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

"ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெரும்பான்மையான வெற்றியைப் பெற்றிருக்கிறது. ஆகையால் இந்தமுறை எந்தவித பிரச்சினையும் இல்லாமல் உறுதியான அரசாங்கம் அமையப் போகின்றது என்பது உண்மை. அந்தவகையில் இந்த வெற்றிகளுக்கெல்லாம் பொறுப்பாக இருந்தவர் எமது மதிப்புக்குரிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களே.

வடக்கு கிழக்கு மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் வாக்களித்திருக்கிறார்கள், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் வாக்களித்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில் நோக்குகின்ற பொழுது தமிழ் மக்கள் இன்னமும் அடையமுடியாத இலக்குகளை நோக்கிச் சிந்திப்பதாகவும் அல்லது அரசியலில் இன்னமும் தெளிவுறவில்லை என்ற ஒரு விடயத்தையும் எங்களால் காணக் கூடியதாக இருக்கின்றது.

ஒருங்கிணைந்த இலங்கைக்குள் பிரச்சினையை முடித்துக்கொள்ளப் போகின்றோம் என்று சொன்னால், நாங்கள் அரசாங்கத்தோடு இணைந்து முரண்பாடில்லாமல் எங்களுடைய பிரச்சினையை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இருக்கிறது" என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக