சோமாலியக் கடற்கொள்ளையர்களால் சவூதி கப்பலுடன் கடத்திச் செல்லப்பட்டுள்ள இலங்கையர்கள் 13 பேரினதும் நிலை தொடர்பாக, ஜித்தாவில் உள்ள >தூதரக அதிகாரி, சவூதி அரேபிய கப்பல் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கடற்கொள்ளையர்கள், தாம் இலங்கை பணியாளர்களுக்கு எவ்வித ஊறுகளையும் விளைவிக்கப் போவதில்லை என உறுதியளித்துள்ளதாகக் கப்பல் நிறுவன அதிகாரிகள், இலங்கையின் ஜித்தா தூதரக அதிகாரியிடம் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கப்பல் பணியாளர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.
கப்பல் நிறுவன அதிகாரிகள்,கடற்கொள்ளையர்களுடன் செய்மதி மூலம் தொடர்பை ஏற்படுத்தி இந்த உறுதிமொழியைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவின் 'நிசா அல் சவூதி' கப்பல் 13 இலங்கைப் பணியாளர்கள் உட்பட 14 பேருடன், ஜப்பானில் இருந்து ஜித்தாவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது, சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பணயக்கைதிகளை விடுவிக்க, கடற்கொள்ளையர்கள், 2.2 மில்லியன் டொலர்களைக் கப்பமாக கோரியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக