14 செப்டம்பர், 2010

மலையக மக்கள் இனியும் தோட்ட கம்பனிகளில் தங்கி வாழ முடியாது நல்லிணக்க ஆணைக்குழு முன் பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் சாட்சியம்


மலையகப் பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்தினுடையது என்றும், இனியும் அவர்கள் பெருந்தோட்டக் கம்பனிகளில் தங்கி வாழ முடியாது என்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

மலையக மக்கள் எவருக்கும் கட்டுப்பட்டு வாழ வேண்டியதில்லை என்றும் அவர்கள் தோட்டத் தொழில் தளத்தில் இருந்து வீடு திரும்பினால் இந்த நாட்டின் பிரஜைகள் என்றும் குறிப்பிட்ட பிரதியமைச்சர் சிவலிங்கம், தொழிலாளர்கள் தொடர்பான பொறுப்பு அரசா ங்க த்தினுடையது என்றும் சுட்டிக்காட்டினார்.

தொழிலாளர் களின் லயன் குடியிருப்புகளை இல்லாதொழிப்பதற்கு 225,000 தனி வீடுகள் நிர்மாணிக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு அரசாங்கமே உதவ வேண்டும் என்றும் குறிப்பிட்ட பிரதியமைச்சர் சிவலிங்கம், வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் பொறுப்பு கம்பனிகளினது அல்லவென்றும் ஏனெனில், தொழிலாளர்கள் குடியிருக்கும் வீடுகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொழிலாளர்களுக்கே சொந்தமானது என்று தெரிவித்தார். அவற்றைத் திருத்தியமைப்பதற்கும் மாற்றியமைப்பதற்கும் தொழிலாளர்களுக்கே உரிமை உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு முன்னிலையில் நேற்று சாட்சியம் அளித்த பிரதியமைச்சர் சிவலிங்கம் ஆணைக்குழு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பதில் அளித்தார். காங்கிரஸின் செயலாளர் நாயகம் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் சாட்சியம் அளிப்பார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அவருக்குப் பதிலாகப் பிரதியமைச்சர் சிவலிங்கம் நேற்று சாட்சியம் அளித்தார். அவர் தொடர்ந்து சாட்சியமளிக் கையில் :-

‘தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் கூடத் தமிழ் மொழி அமுலாக்கப்படுவதில்லை. நுவரெலியா மாவட்டத்தில் 52 வீதம் தமிழர்கள் வாழ்கிறார்கள். ஆனால், அங்கு கூடத் தமிழ் மொழி அமு லாக்கப்படவில்லை.

நாட்டின் எந்தப் பாகத்தில் குறிப் பிட்ட 12 அல்லது 20 வீதம் தமிழ் பேசும் மக்கள் வாழ்வார்களாக இருந்தால் அங்கு தமிழ் மொழி அமுல்படுத்தப்பட வேண்டும். கல்வித் துறையில் அனைத்துச் சுற்று நிருபங் களும் தனிச் சிங்களத்தில் தான் அனுப்பப்படுகின்றன. பாடசாலைக ளில் போதிய வளங்கள் இல்லை.

ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவு கிறது. போதியளவு ஆசிரியர்கள் இருந்தும் உயர் தரத்தில் கற்பிப் பதற்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது.

அரசாங்க அலுவலகங்களில் தமிழ் தெரிந்த உத்தியோகத்தர்களை நிய மிக்க வேண்டும் என்ற கொள் கைக்கு இணங்க நான் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக இரு ந்த காலத்தில் 500 உத்தியோகத் தர்களை கச்சேரிகளில் பணியாற்ற நியமித்தோம். ஆனால் அவர்களின் சேவை உரிய முறையில் பெறப் படவில்லை. அவர்களை ஏனைய உத்தியோகத்தர்களுக்குத் தேனீர் தயா ரிப்பதற்காகப் பயன்படுத்துகிறா ர்கள். இந்தக் குறைபாடுகள் உடன டியாக நீக்கப்பட வேண்டும். ஆசிரி யர் பற்றாக்குறையைப் போக்க இந்தியாவில் இருந்து தருவிக்க முடியும்’ என்று பரிந்துரைத்த பிரதி யமைச்சர் சிவலிங்கம்;

புலிகளுடன் ஏற்படுத்திக்கொண்ட போர் நிறுத்த உடன்படிக்கையின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சமா தான முன்னெடுப்பில் மலையகத் தில் வாழும் தமிழர்கள் அந்நியப் படுத்தப்பட்டார்கள் என்று குறிப் பிட்டார். அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் இனப் பிரச்சினை யைத் தீர்ப்பதற்குப் பெரும் முயற்சி எடுத்தார் என்றும் ஆனால் புலிகள் எந்தவித உள்ளகத் தீர்வுக்கும் உடன் படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

யுத்தம் முடிவுக்கு வந்துள்ள போதிலும் இந்திய வம்சாவளியினர் இன்னமும் முகாம்களில் தடுத்து வைத்திருப்பதைப் பற்றி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கவலை யடைகிறது என்று குறிப்பிட்ட பிரதியமைச்சர் சிவலிங்கம், யுத்தம் இல்லாத நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இளைஞ ர்கள் இன்னும் தடுத்து வைக்கப் பட்டிருப்பது நியாயமற்றதென்று தெரிவித்தார்.

தோட்டங்களை நிர்வகிக்கும் முகாமைத்துவ கம்பனிகள்தானே தொழிலாளர்களின் நலன்களைக் கவனிக்க வேண்டும்? என்று ஆணை க்குழு உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த பிரதிய மைச்சர், “இல்லை, தொழில் ரீதியான பொறுப்பு மட்டுமே கம்பனிகளுக்கு உண்டு, நாங்கள் யாரையும் இனித் தங்கி வாழ முடியாது. நாட்டில் உள்ள ஏனைய ஊழியர்களைப் போலவேதான் நாங் களும் பெருந்தோட்டங்களில் தொழில் புரிகிறோம். எங்கள் வீடுகளில் வாழ்கிறோம். தொழில் புரியும் நேரத் தைத் தவிர நாங்கள் கம்பனிகளின் கீழ் வாழ்பவர்கள் அல்லர். அரசாங் கமே எமக்குப் பொறுப்பு என்றார்.

அரசாங்க நிறுவனங்களில் தமிழை அமுல்படுத்துவதற்கு எவ்வளவு காலம் தேவை எனக் கருதுகிஹர்கள்? என்ற கேள்விக்குப் பதில் அளித்த பிரதியமைச்சர் சிவலிங்கம்; நாங்கள் தேவைக்கு அதிகமாகவே காத்தி ருந்துவிட்டோம். இனியும் காத்தி ருக்க முடியாது. எங்கள் மத்தியில் படித்தவர்கள் இருக்கிறார்கள். 500 அனுசரணையாளர்களை நியமிக்க விண்ணப்பம் கோரப்பட்டபோது 12 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந் தார்கள். அனைவரும் படித்தவர்கள். அவர்களைக் கொண்டே இந்த மொழிப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என்று பதில் அளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக