14 செப்டம்பர், 2010

ஐ.தே.க. உட்பூசல் உக்கிரம்: 25 அதிருப்தி எம்.பிகளுடன் மேலும் பலர் இணைவு

ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் தலைமைத்துவப் பிரச்சினையைத் தீர்க்காவிட்டால், சுயாதீனக் குழுவாக செயற்படப் போவதாக அறிவித்துள்ள 25 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மேலும் பலர் இணைவரென ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

தலைவர் தொடர்ந்தும் பிடிவாதமாக இருப்பாரேயானால் மேலும் பல எம்.பிகள் எம்முடன் இணைவர். ஒரு கட்சி என்ற வகையில் இதே நிலைமை மேலும் தொடர முடியாது என தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியில் யாப்பு சீர்திருத்தம் நடைபெறும் வரை கட்சித் தலைமைக்கு அப்பால் தனித்து தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக