14 செப்டம்பர், 2010

போதைப் பொருள் வியாபாரத்தை கட்டுப்படுத்த விசேட பொலிஸ் பிரிவு




நாடு முழுவதும் இடம்பெறும் கள்ளச் சாராய மற்றும் போதைப் பொருள் வியாபாரத்தையும் முழுமையாக ஒழித்துக் கட்டுவதற்காக பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ விசேட பொலிஸ் பிரிவொன்றை அமைத்துள்ளார்.

42 பொலிஸ் பெரும் பிரிவுகளை உள்ளடக்கி பொலிஸ் தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த விசேட பிரிவு “பொலிஸ் தலைமையக அமைப் புடனான ஊழல் ஒழிப்பு பிரிவு” என்று அழைக்கப்படும்.

பாதுகாப்பு செயலாளர் மூலம் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவின்படி இந்தப் பிரிவுக்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக எம்.கே. இலங்ககோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தப் பிரிவின் பணிப்பாளராக கொழும்பு குற்றப் பிரிவு பொலிஸ் தலைமையக குற்றப் பிரிவு சூழல் பொலிஸ் பிரிவின் பணிப்பாளராகவும் பணியாற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க நியமிக்கப் பட்டுள்ளார். கடந்த 5ம் திகதி முதல் இந்த பொலிஸ் பிரிவு பொலிஸ் தலைமையகத்தின் உதவியுடன் விலாசிதா நிவஸவின் மூன்றாவது மாடியில் இயங்குகிறது. இது 24 மணி நேரமும் செயற்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக