14 செப்டம்பர், 2010

மும்மொழிகளிலும் செயற்படும் நாடாக இலங்கை மாற்றமுறும் பொதுநலவாய தொலைத்தொடர்பு மாநாட்டில் ஜனாதிபதி






2020ம் ஆண்டிற்குள் மும்மொழிகளிலும் செயற்படும் நாடாக இலங்கை உருவாக்கப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நவீன தொலைத்தொடர்பு மற்றும் உயர் தொழில்நுட்ப மேம்பாட்டினூடாக இந்த எதிர்பார்ப்பினை அடைய முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

யுத்த சூழ்நிலைக்கு மத்தியிலும் தொழில் நுட்பம் மற்றும் ஆங்கில மொழிப் பயிற்சியை மேம்படுத்தும் செயற்பாடுகளில் குறிப்பிட்ட இலக்கை அடைய முடிந்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அரசாங்கம் இத்துறைகளில் முக்கிய கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

பொதுநலவாய நாடுகளின் தொலைத்தொடர்பு மாநாடு நேற்று கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் ஆரம்பமானது. 17ம் திகதி வரை நடைபெறவுள்ள மேற்படி மாநாட்டை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து சிறப்புரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர்கள் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், ஜீவன் குமாரதுங்க, ஜனாதிபதியின் செயலாளரும் இலங்கை தொலைத்தொடர்புகள் சீர்திருத்த ஆணைக் குழுவின் பணிப்பாளருமான லலித் வீரதுங்க உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,

மூன்று தசாப்தங்களாக பயங்கரவாத யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை தற்போது தெற்காசியப் பிராந்தியத்தில் சிறந்த தொடர்பாடலைக் கட்டியெழுப்பியுள்ள நாடாகத் திகழ்கிறது.

இலங்கையைப் பொறுத்தவரை தொலைத்தொடர்புத் துறையில் குறுகிய காலத்தில் போதுமான வளர்ச்சியினை அடைந்துள்ளது. இன்னும் மூன்று வருட காலத்திற்குள் தொலைத்தொடர்பு மற்றும் இன்டர்நெட் சேவைகளுக்கான செலவுகளைக் குறைத்து சகல வீடுகளுக்கும் அந்த வசதிகளை வழங்குவதற்கான செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

1948ல் சுதந்திரமடைந்த இலங்கை பொதுநலவாய நாடுகளின் ஆரம்ப அங்கத்துவ நாடாகத் திகழ்வதுடன் நெருங்கிய தொடர்புகளையும் கொண்டுள்ளது.

தொலைத்தொடர்புத் துறையில் நாம் அடைந்துள்ள முன்னேற்றம் உண்மையில் பெருமைப்படத்தக்கது. இந்தளவு வளங்களையும் அறிவையும் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தவும் பயங்கரவாத த்தைத் தோற்கடிக்கவும் உபயோகப்படு த்தியுள்ளோம். இருபது மில்லியன் சனத்தொகையைக் கொண்ட நாட்டில் 14 மில்லியன் கையடக்கத் தொலைபேசிகள் பாவனையில் உள்ளன. இந்த வகையில் நாட்டில் 3ல் 2 வீத மக்கள் இந்த வலையமைப்பில் இணைந்து கொண்டுள்ளமை குறிப் பிடத்தக்கது.

அத்துடன் நிலையான தொலைபேசிகள், கேபிள் மூல தொலைபேசிகள் 3.5 மில்லியன் பாவனையில் உள்ளன. இந்த வகையில் ஆசியாவின் தொலைத்தொடர்பு பாவனையில் அதிகரித்த பாவனை யாளர்களைக் கொண்ட நாடாக நாம் திகழும் காலம் வெகுதூரத்திலில்லை.

சகலருக்கும் தொலைத்தொடர்பு வசதிகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் கொள்கை ரீதியான செயற் திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விரிவான விலைக்குறைப் பொன்றை மேற்கொள்ளவும் சகலருக்கும் தொலைத்தொடர்பு மற்றும் இணைய வசதிகளைப் பெற்றுக் கொடுக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ஏனைய துறைகளைப் போன்றே தொலைத்தொடர்பு துறையிலும் ஆசியாவின் கேந்திர மையமாக இலங்கையை உருவாக்குவதே எமது நோக்கம். இலங் கையை ஆசியாவின் உன்னதமான நாடா கக் கட்டியெழுப்பும் எமது இறுதி நோக்கில் இது முக்கிய இடம்பெறுகின்றது.

கடல் மற்றும் வான், மின்சாரம், வர்த்தகம் அத்துடன் அறிவு வளர்ச்சி போன்ற வற்றில் இலங்கையை பிராந்தியத்தின் சிறந்த நாடாக உருவாக்குவதும் எமது இலக்காகுமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக