இலங்கையில் மனிதாபிமான சேவைகளை மேற்கொள்ளும் நோக்கில் அமெரிக்க முப்படையினர் குழு ஒன்று ஆறு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் வான், கடல், தரை மற்றும் பொதுச் சுகாதார சேவையைச் சேர்ந்த நாற்பது பேர் அடங்கிய குழுவினரே இலங்கை வந்துள்ளனர்.
இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து வைத்திய மற்றும் கட்டிட நிர்மாண பயிற்சிகளை இவர்கள் வழங்குகின்றனர். நேற்று முதல் இவர்கள் தமது பணிகளை ஆரம்பித்துள்ளனர்.
புத்தளம் , செட்டிக்குளம், அனுராதபுரம், மதவாச்சி ஆகிய இடங்களில் மருத்துவ மற்றும் பாடசாலை புனர்நிர்மாணப் பணிகள் போன்றவற்றில் இவர்கள் ஈடுபடுகின்றனர் என அமெ. தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக