17 ஆகஸ்ட், 2010

பெற்றோரின் பராமரிப்பற்ற 1200 சிறுவர்கள் வடமாகாணத்திலுள்ள சிறுவர் இல்லங்களில்


பெற்றோரில் இருவரையும் இழந்த அல்லது தாயையோ தந்தையையோ இழந்த மற்றும் பெற்றோரின் பராமரிப்பு அற்ற 1200 சிறுவர்கள் வடக்கில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய நான்கு மாவட்டங்களிலிருந்தும் அடையாளங் காணப்பட்ட இந்த சிறார்களை வடமாகாணத்தின் அங்கீகாரம் பெற்ற பாதுகாப்பான நான்கு சிறுவர் இல்லங்க ளுக்கு அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள் ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள நான்கு சிறுவர் இல்லங்களில் செம்டெம்பர் முதல்வாரம் தொடக்கம் இந்த 1200 சிறார்களும் தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்படவுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாந்தை வடக்கு, மற்றும் வவுனியா வடக்கு ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் மூலமே 1200 சிறுவர்களும் அடையாளங் காணப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

12 வயதுக்குட்பட்ட 1200 சிறுவர்களே இந்த கணக்கெடுப்பின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களை அரசாங்க த்தின் செலவில் பராமரிக்கும் பொருட்டு தேவையான நிதியை வடமாகாண சபையின் ஊடாக ஒதுக்கத் தீர்மானிததள்ள தாக ஆளுநர் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக