சென்னை : தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையால் தாக்கப்பட்ட பிரச்னைகளை குறித்து, இந்திய வெளிவிவகாரத் துறை இலங்கை அரசுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கும் என, முதல்வர் கருணாநிதிக்கு மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பதிலளித்துள்ளார். இலங்கை கடற்படையினரால் அப்பாவி தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி, ஒருவர் படுகொலை செய்யப்பட்டது குறித்து கண்டனம் தெரிவித்து, இத்தகைய சம்பவங்களை மத்திய அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து, பிரதமருக்கு முதல்வர் கருணாநிதி அவசர கடிதம் ஒன்றை அனுப்பினார். அக்கடிதத்தின் நகல், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்திற்கு அனுப்பப்பட்டது. அக்கடிதம் கிடைத்ததும் அவர், தமிழக முதல்வர் கருணாநிதிக்கு இன்று எழுதிய கடிதத்தில், "தங்கள் கடிதம் தொடர்பாக பிரதமர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோரிடம் எடுத்துரைத்துள்ளேன்; விரிவாக விவாதித்திருக்கிறேன். இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகம் இலங்கை அரசுடன் பேசி, இப்பிரச்னை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்' என்றும் தெரிவித்துள்ளார்.
9 ஜூலை, 2010
இலங்கை அரசுடன் பேசி நடவடிக்கை : சிதம்பரம் பதில்

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக