24 மே, 2010

நிவாரணப் பணிகளுக்கு ரூ. 9 கோடியே 70 இலட்சம் ஒதுக்கீடு: பாதிக்கப்பட்டோரின் தேவைகளை பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கை



கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்கள் உட்பட நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் பெய்துவரும் கடும் மழை, வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நட வடிக்கைகளுக்காக 9 கோடியே 70 இல ட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் ஏ. எச்.எம். பெளஸி தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் குறைபாடுளை ஆராயும் நடவடிக்கைகள் தற்போது மேற் கொள்ளப்பட்டு வரு வதாகத் தெரிவித்த அமைச்சர், அவ்வப் பகுதி கிராமசேவகர் களின் சிபாரிசுகளுக் கமைய பாதிக்கப் பட்டவர்களின் தேவை களைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்குமெனவும் தெரிவித்தார்.

அதேவேளை; வெள்ளம், கடும் காற்று காரணமாக முழுமையாகப் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கென தலா 50,000 ரூபாவை வழங்கவுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் பகுதி பகுதியாகச் சேதமடைந்த வீடுகளைத் திருத்துவதற்கும் உதவிகள் வழங்கப்படு மெனவும் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தமது பொறுப்புக்களை முறையாக மேற்கொள்ளத் தவறுவார்களாயின் அவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதில் பின்னிற்கப் போவதில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களாக நாடெங்கிலும் பெய்த மழை, வெள்ளம் காரணமாக ஆறரை இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பதினையாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி மாவட்டங்களிலேயே மக்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டனர். வெள்ளத்தினால் சுமார் இரண்டாயிரம் வீடுகள் முற்றாக பாதிப்படைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக