“நடைமுறையிலுள்ள மாவட்ட தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்ட காலம் முதல் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை உருவாக்கத் தவறிவந்துள்ள புத்தளம் கெளரவத்தோடு ஒருபாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை உருவாக்கிக் கொள்வதற்கான அரிய சந்தர்ப்பமும், இறுதிச் சந்தர்ப்பமும் உருவாகியுள்ளது; அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்வதில்தான் புத்தளத்தின் வளமான எதிர்காலம் தங்கியுள்ளது.”
இவ்வாறு பிரதி அமைச்சர் கே. ஏ. பாயிஸ் புத்தளம் வெட்டுக்குளம் வீதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் :-
“22 வருட கால அரசியல் வெறுமையிலிருந்து புத்தளத்தை மீட்டெடுப்பது என்பது முக்கியமான விடயம். ஆயினும் ஆளும் கட்சியின் முலம் ஒரு பிரதிநிதித்துவத்தை பெற்றெடுப்பது அதைவிட முக்கியமான ஒன்றாகும்.
இப்போது நடைமுறையிலுள்ள அரசியல் யாப்பின் பிரகாரம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் கட்சியைச் சேராத எந்த ஒரு அரசியற் தலைமைத்துவத்தாலும் ஒரு பிரதேசத்துக்கு எந்த அபிவிருத்தியையும் செய்துவிட முடியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக