4 ஏப்ரல், 2010

யாழ்ப்பாணத்தில் முன்னாள் புலி உறுப்பினர்களின் குடும்பங்களுக்கும் வீடுகள்






யாழ்ப்பாணத்தில் படையினர் நிர்மாணித்துள்ள வீடு களில், புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்க ளின் குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களின் விதவை மனைவியர் மற்றும் மிகவும் வறிய நிலையில் உள்ள வர்களுக்கு முன்னுரிமை வழங்கி குடும்பங்கள் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளதாக யாழ். படைப் பிரிவுகளின் பொறுப்பதிகாரிகள் தினகரனுக்குத் தெரிவித்தனர்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்திற்கு மீளக் குடியமரச் சென்றவர்களுக்காக வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் பிரதேசங்களில் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

2006ஆம் ஆண்டு பல்வேறு காரணங்கள் நிமித்தம் வன்னிக்குச் சென்று பாதை மூடியதால் சிக்குண்டவர் கள், இறுதி யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து கடந்த வருட இறுதியில் மீண்டும் யாழ்ப்பாணம் சென்று ள்ளனர். அவ்வாறானவர்களுக்கு யாழில் சொந்தக் காணி இருந்தும் நிரந்தரமான குடியிருப்பு இல்லை. இவர்களைத் தேர்ந்தெடுத்தே இராணுவத்தினர் வீடுகளை நிர் மாணித்துள்ளனர்.

இந்த வீடுகள் நேற்று மூன்றாம் திகதியிலிருந்து பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. கடந்த முதலாம் திகதி இந்த வீடுகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பிரதாயபூர்வமாகக் கையளித் திருந்தார்.

இராணுவத்தினர் நிர்மாணித்து வரும் சுமார் 700 வீடு களுள் 450 வீடுகள் வரை முழுமையாக நிர்மாணித்து முடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக