4 ஏப்ரல், 2010

சுயேச்சைக்குழு 15, 18 தேசிய காங்கிரசுக்கு ஆதரவு

பொதுத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் ஊடகவியலாளரான எம்.எம்.எம்.நூறுல் ஹக்கை தலைமை வேட்பாளராக கொண்டு போட்டியிடும் சுயேட்சை அணி 15 தேசிய காங்கிரஸிற்கு தமது ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளது.

சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை அக்குழுவினர் வெளியிட்டனர். மேலும் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினையும் தேசிய காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாவிடம் தலைமை வேட்பாளர் நூறுல்ஹக் வழங்கி வைத்தார்.

இந்த இணைப்பு தொடர்பாக கருத்துத் தெரிவித்த தேசிய முஸ்லிம் கவுன்சில் தவிசாளரும் ஊடகவியலாளருமான அஸ்லம் எஸ். மெளலான, எமது சுயேட்சை அணி ஏனைய பத்தோடு பதினொன்றாக இல்லாமல் ஒரு இலட்சய பயணத்தை நோக்கியதாக செயற்படுகிறது.

எமது அணியின் முழு மூச்சாக இருப்பது சாய்ந்தமருது பிரதேசத்துக்கான தனி பிரதேச சபையை உருவாக்குவ தாகும்.

இந்த மாவட்டத்தின் சக்தியாக விளங்கும் தேசிய காங்கிரஸ் கட்சி தலைமைத்துவத்துடன் பேசிய போது அவர் எமது கோரிக்கை நியாயபூர்வமாக ஏற்று தமக்கு உறுதியுரை வழங்கியுள்ளார். அதனையிட்டே எமது சுயேற்சை குழு- 15 அவருக்கு ஆதரவு வழங்குவதுடன் அவருடைய மூன்று வேட்பாளர்களினதும் வெற்றிக்கு முழுமையாக உழைக்கும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை இந்த பத்திரிகையாளர் மாகாநாட்டின் போது மேலும் ஒரு சுயேற்சை குழுவான அப்பிள் இனத்தில் இல- 38 ல் போட்டியிடும் தலைமை வேட்பாளரும் முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர் அணி அமைப்பாளருமான ஆசீக் குழுவினரும் தேசிய காங்கிரஸணுக்கு தமது ஆதரவை தெரிவித்து அறிக்கைவிட்டதுடன் தேசிய காங்கிரஸ் தலைமையுடன் இணைந்து கொண்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக