பாதுகாப்பு கவுன்சில் மூலமாக ஈரான் மீது தடை விதிக்க, வளர்ந்து வரும் நாடுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என, அமெரிக்கா கேட்டுக் கொண் டுள்ளது.'ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கிறது' எனக் கூறி, அதன் மீது பொருளாதார தடை விதிப்பதற்கான முயற்சிகளை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. இதற்கு சீனா ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென வலியுறுத்திய அமெரிக்கா, தற்போது இந்தியாவின் ஒத்துழைப்பையும் கேட்டுள்ளது.
ஈரான் - பாகிஸ்தான் - இந்தியா இடையிலான, பல கோடி ரூபாய் மதிப் புள்ள எரிவாயு பைப்லைன் தொடர்பான பேச்சு வார்த்தையை மீண்டும் இந்தியா துவங்க உள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த, அமெரிக்க பொது விவகாரங்கள் துறை துணை அமைச்சர் பி.ஜே. கிரவுளி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:ஈரான் விவகாரத்தில் ஒவ்வொரு நாடும், குறிப் பாக வளர்ந்து வரும் நாடுகள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். இம்முயற்சிக்கு சர்வதேச அளவில், அனைவரும் ஒத்துழைப்பு அளித்து, ஈரான் மீது விதிக்கப்படும் தடைக்கு, கீழ்படிய அந்நாட்டை வற் புறுத்த வேண்டும். இந்தியா உட்பட பல நாடுகள், ஈரானுடன் பொருளாதார உறவுகள் ஏற்படுத்திக் கொள்வது கவலையளிக்கிறது. அவ்வாறான உறவுகளை பின்பற்ற, இது சரியான தருணம் அல்ல.இவ்வாறு கிரவுளி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக