19 ஏப்ரல், 2010

பொன்சேகாவுக்கு எதிரான இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணை இன்று





முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணை இன்று நடைபெறவுள்ளது.

கடற்படைத் 19.4.2010 இன்று காலை நடைபெறவுள்ள நீதிமன்ற விசாரணைக்கு மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் தலைமைவகிப்பார்.

மேஜர் ஜெனரல் எஸ். டபிள்யூ. எல். தவுலகம, மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுரு சிங்க ஆகியோர் இந்த இராணுவ நீதிமன்றத்தின் ஏனைய அங்கத்தவர்களாக கலந்து கொள்ளவுள்ளதுடன் நீதவான் அட்வகேட்டாக ரியர் அட்மிரல் டபிள்யூ. டபிள்யூ. ஜே. எஸ். பெர்னாண்டோ செயற்படவுள்ளார்.

இராணுவத்திற்கான கொள்வனவு மற்றும் இராணுவ நடைமுறையை மீறியமை என்ற அடிப்படையில் நான்கு குற்றச் சாட்டுகள் தொடர்பில் இன்றைய நீதிமன்ற விசாரணை எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

புதிதாக மீண்டும் நியமிக்கப்பட்ட இந்த இரண்டாவது இராணுவ நீதிமன்றம் கடந்த 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கூடிய போது அடுத்த விசாரணையை இன்று (19) திகதி நடத்துவது என அறிவித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக