19 ஏப்ரல், 2010

சபையில் பொன்சேகாவுக்கு முன்வரிசையில் ஆசனம்




ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு நாடாளுமன்றத்தில் முன்வரிசை ஆசனம் ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஜெனரல் சரத் பொன்சேகா ஒரு கட்சியின் தலைவர் என்ற காரணத்தினால் எதிர்க்கட்சியின் முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்படவுள்ளது.

கட்சித்தலைவர்களுக்கு முன்வரிசையில் ஆசனங்கள் ஒதுக்கப்படுவது வழமையான நிகழ்வாகும். ஏனையோர் சேவை மூப்பு அடிப்படையில் அமர்ந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இம்முறை நாடாளுமன்றில் குறைந்தபட்சம் 27 ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சியின் பக்கம் அமர நேரிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆளும் கட்சிகளுக்காக நாடாளுமன்றில் தலா 116 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சுமார் 143 ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக