23 ஏப்ரல், 2010

பசில் ராஜபக்சவுக்கு சுற்றுலாத்துறை, துறைமுக, பொது வானூர்தி சேவை அமைச்சுப்பதவி கிடைக்க வாய்ப்பு-

இம்முறை அமைச்சரவையில் அதிகளவு விருப்புவாக்குகளைப் பெற்றுள்ள பசில் ராஜபக்ச மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் மாத்திரமே புதிதாக இணைத்துக் கொள்ளப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்தமுறை அமைச்சுப் பதவிகள் வகித்த அமைச்சர்களது பல பதவிகள் மாறுவதுடன் சில அமைச்சர்களுக்கு மாத்திரமே இம்முறையும் அதே அமைச்சுப் பதவிகள் கிடைக்கவுள்ளது. பசில் ராஜபக்சவுக்கு சுற்றுலாத்துறை மற்றும் துறைமுக பொது வானூர்திசேவை அமைச்சுப் பதவியும், ஜீ.எல்.பிரிசுக்கு வெளியுறவமைச்சர் பதவியும், குமார வெல்கமவுக்கு போக்குவரத்து அமைச்சர் பதவியும், பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பதவியும் வழக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பந்துள குணவர்த்தன மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகிய முன்னாள் அமைச்சர்களுக்கு முன்னர் வகித்த அமைச்சுப் பதவிகளே வழங்கப்படுமென்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக