1 ஏப்ரல், 2010

சீனா மிரட்டலை சந்திக்க இந்திய ராணுவம் தயார்: புதிய தளபதி வி.கே.சிங் பேட்டி





இந்தியாவின் பகை நாடுகளாக பாகிஸ்தானும், சீனாவும் உள்ளன. 1962-ம் ஆண்டு சீனா இந்தியா மீது போர் தொடுத்தது. இதன் பிறகு இந்தியாவுடன் எந்த போரிலும் ஈடுபடவில்லை. என்றாலும் இந்தியா மீது மறைமுக யுத்தத்தை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

சீன போரின்போது காஷ்மீர், இமாச்சல பிரதேசம் பகுதியில் கைப்பற்றப்பட்ட பல ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலத்தை இன்னும் திருப்பி தர மறுக்கிறது. சிக்கிம், அருணாச்சல பிரதேச மாநிலம் எங்களுக்குதான் சொந்தம் என்று உரிமை கொண்டாடி வருகிறது.

அடிக்கடி இந்திய எல்லைக்குள் ஊடுருவி அட்ட காசங்களை செய்கிறது. இது மட்டுமல்லாமல் இந்தியாவில் முக்கிய இணைய தளங்களுக்குள் புகுந்து தகவல்களை திருடுகிறது. அல்லது தகவல்களை அழிக்கிறது.

எல்லை பகுதி முழுவதிலும் சாலைகளை அமைத்து ராணுவ முகாம்களையும் வலுப்படுத்தி வருகிறது. இதுவரை இந்தியாவின் வட எல்லை பகுதியில் மட்டுமே அச்சுறுத்தி வந்த சீனா இப்போது தமிழ்நாட் டுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் நடந்த சண்டையின்போது இலங்கை அரசுக்கு உதவியது போல வந்த சீனா இப்போது அங்கு ஆழமாக காலூன்றி இருக்கிறது.

மறு சீரமைப்பு மற்றும் உதவி பணிகளை செய்வதாக 10 ஆயிரம் ராணுவ வீரர்கள் இலங்கையில் புகுந்துள்ளனர். இவர்களில் ஒரு பிரிவினர் தமிழ்நாட்டுக்கு மிக அருகில் உள்ள கச்சத்தீவிலும் முகாமிட்டு உள்ளனர்.

இந்தியாவை நோட்டமிடு வதற்கும் எதிர்காலத்தில் இந்தியா மீது போர் தொடுக்க தயாராகும் வகையிலும் அவர்கள் இலங்கையில் ஊடுருவி இருப்பதாக கருதப்படுகிறது.

இது இந்தியாவுக்கு குறிப்பாக தமிழ்நாட்டுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.

இந்த நிலையில் நேற்று இந்திய புதிய ராணுவ தளபதியாக பதவி ஏற்றுக்கொண்ட வி.கே.சிங் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:-

இந்திய ராணுவம் எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளும் வகையில் தயாராக இருக்கிறது. பாகிஸ் தான் மட்டும் அல்ல சீனாவின் அச்சுறுத்தலையும் சந்திக்கும் வகையில் நமது ராணுவம் பலப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்தியாவுக்கு உடனடியாக எந்தவித ஆபத்தும் இருப்பதாக தெரியவில்லை.

ராணுவத்துறையில் ஊழல் போன்றவை நடக்காமல் பார்த்து கொள்வதில் கவனம் செலுத்தப்படும். இதற்காக ராணுவ உள்கட்ட மைப்புகளில் தேவையான சீரமைப்பு பணிகள் மேற் கொள்ளப்படும்.

உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய பணிகள் பல உள்ளன. அதில் அதிக அக்கறை எடுத்து கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக