1 ஏப்ரல், 2010

புலிகளிடமிருந்து எடுக்கப்பட்ட தங்கம் வங்கிகளில் டெபாசிட்: இலங்கை அரசு தகவல்






புலிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பெருமளவு தங்கம் மற்றும் பணம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்று இலங்கை அரசு விளக்கம் அளித்துள்ளது.
÷விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், அவர்களிடமிருந்து கிலோ கணக்கில் தங்கம் மற்றும் ஏராளமான பணத்தை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். அது தற்போது வங்கிகளில் உரிய கணக்குகளோடு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்று அதிபரின் மூத்த ஆலோசகர் பாசில் ராஜபட்ச தெரிவித்தார்.
÷விடுதலைப் புலிகளிடமிருந்து அபகரிக்கப்பட்ட தங்கம் மற்றும் பணத்தை இலங்கை அரசு கணக்கில் கொண்டு வரவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதற்கு பாசில் ராஜபட்ச விளக்கம் அளித்துள்ளார்.
÷விடுதலைப் புலிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட எல்லாவற்றையும் பாதுகாப்பு படையினர் எங்களிடம் ஒப்படைத்தனர். அதை நாங்கள் வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளோம் என்றார் அவர்.
÷இந்தப் பிரச்னையை எதிர்க்கட்சி தலைமை கொறடா ஜோசப் மைக்கேல் பெரேரா இலங்கை நாடாளுமன்றத்தில் எழுப்பினார். விடுதலைப் புலிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் பெருமளவு பணத்தின் கதி என்ன என்று அவர் கேள்வி எழுப்பினார்.
÷விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகார செயலர் குமரன் பத்மநாதனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் தெரிவித்த தகவல்களை அரசு பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
÷பிற எதிர்க்கட்சிகளும் இந்த கேள்வியை எழுப்பின. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், பணம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் சொல்லப்பட்டாலும் எந்த வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. எவ்வளவு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது, என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
÷கடந்த மே மாதம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரில் விடுதலைப் புலிகளின் வசமிருந்த முக்கிய ஆவணங்களையும் தங்கம், பணம் போற்றவற்றையும் இலங்கை ராணுவம் அபகரித்து கொண்டது. ஆனால் பணம், தங்கம் அபகரித்தது குறித்து இலங்கை அரசு தரப்பில் எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. தற்போது எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியதை அடுத்து தங்கம், பணம் பறிமுதல் செய்யப்பட்டதை இலங்கை அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக