4 மார்ச், 2010

தனியாக சென்ற பெண்ணுக்கு சிறை எதிர்த்து கருத்துரியாத் : சவுதி அரேபியாவில் ஆண் துணையில்லாமல் தனியாக சென்ற பெண்ணுக்கு அளிக்கப்பட்டுள்ள சிறை தண்டனையை ரத்து செய்யும் படி பெண்கள் அமைப்பு கோரியுள்ளது.சவுதி அரேபியாவில் பெண்கள்இ ஆண்கள் துணையில்லாமல் கார் ஓட்டக்கூடாது. நீண்ட தூரங்களுக்கு ஆண் துணையுடன் செல்ல வேண்டும்இ என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்த கட்டுப்பாட்டை மீறிய சாசன் சலீம் என்ற பெண்ணுக்கு 18 மாத சிறை தண்டனையும்இ 300 கசையடியும் வழங்க இஸ்லாமிய கோர்ட் உத்தரவிட்டது.இந்த தண்டனையை ரத்து செய்யும் படி மேற்காசிய நாடுகளின் பெண்கள் மனித உரிமை அமைப்பு கோரியுள்ளது.சவுதியில் கடந்த 2007ம் ஆண்டு ஆண் துணையில்லாமல் தனியாக சென்ற 188 பெண்கள் மீது வழக்கு பதிவு செய்து தண்டனை வழங்கப்பட்டது. "இது போன்ற இஸ்லாமிய சட்டங்களுக்கு பரவலாக ஆதரவு உள்ளது. எனவேஇ சவுதியின் சட்டத்திட்டங்களை குறைகூற வேண்டாம்' என சவுதி நிர்வாகம் பெண்கள் அமைப்புக்கு பதிலளித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக