4 மார்ச், 2010

இராணுவ நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்க முடியும்
அட்வகேட் ஜெனரல் சமரகோன்



இராணுவ சட்டத்தின் 133வது பிரிவின் கீழ் இராணுவ நீதிமன்றம் ஒன்றினால் வாய்மூல எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்னர் ஒரு சந்தேக நபருக்கு மரண தண்டனை விதிக்க முடியுமென்று பாதுகாப்பு படைகளுக்கான முன்னாள் நீதிபதி அட்வகேட் ஜெனரல் ஓய்வுபெற்ற பிரிகேடியர் எம். ஜே. சமரகோன் தெரிவித்தார்.

இராணுவ நீதிமன்றம் குறித்து விளக்கமளிக்கும் விசேட சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றது. இதன் போது அவர் விபரிக்கையில்,

சேவையிலுள்ள ஒரு அதிகாரி அல்லது ஓய்வுபெற்ற அதிகாரி இழைத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிப்பதற்காகவே இராணுவ நீதிமன்றம் நியமிக்கப்படுகிறது.

சிவில் நீதிமன்றத்தைப் போன்றே இராணுவ நீதிமன்றிலும் குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட வேண்டும்.

இராணுவ சட்டம், இராணுவ ஒழுக்க விதிகள் மற்றும் இராணுவ நீதிமன்றம் என்பவற்றிற்கு அமைய இராணுவ பொலிஸாரால் கைது செய்ய முடியும்.

அதேபோன்று, ஒருவருக்கு எதிராக இராணுவ பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்படும் பட்சத்தில் அல்லது சேவையில் உள்ள அல்லது ஓய்வுபெற்ற ஒருவர் இராணுவ சட்டத்திற்கு முரணாக நடந்துள்ளார் என்பதை இராணுவ பொலிஸாரால் இனங் காணப்பட்டால் அவர்களை கைது செய்யும் அதிகாரம் இராணுவ பொலிஸாருக்கு உண்டு என்றார்.

ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவரை ஆறு மாத காலத்திற்குள் இவ்வாறு கைது செய்யலாம். ஆனால், தேசத் துரோகம், இராணுவத்தை ஏமாற்றுதல் மற்றும் இராணுவத்திலிருந்து தப்பிச் செல்லுதல் போன்ற குற்றங்களை செய்த ஒருவரை எந்த நேரத்திலும் கைது செய்யலாம்.

இராணுவ நீதிமன்றம் மூன்று முதல் ஐந்து உறுப்பினர்களைக் கொண்டதாகும். முப்படைகளின் தளபதியே இதனை நியமிப்பார். குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் தரத்திற்கு சமமானவராகவும் தற்போது சேவையில் இருப்பவர் ஒருவரே இந்த நீதிமன்றத்திற்கு நியமிக்க முடியும். சமமான தரத்தைக் கொண்ட அதிகாரி ஒருவர் இல்லாத பட்சத்தில் அந்தத் தரத் தைவிட குறைந்த தரத்தைச் சேர்ந்த அதி காரி ஒருவர் நியமிக்க முடியும் என்றார்.

சந்தேக நபர் கைது செய்யப்பட்ட தும் அவருக்கு எதிரான சாட்சியங்க ளின் தொகுப்பு தயாரிக்கப்படும். இத ற்குப் பல மாதங்களும் செல்லலாம். இதனை அடிப்படையாகக் கொண்டே இராணுவ நீதிமன்றத்தினால் தண் டனை விதிக்க முடியும் என்றும் சுட் டிக்காட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக