இலை தழைகளை மட்டும் தின்று 2 ஆண்டுகளாக உயிர் வாழும் சீனர்
சீனாவை சேர்ந்தவர் லி சஞ்சு. 50 வயதான இவர் கடந்த 2 ஆண்டுகளாக இலை தழைகளை தவிர வேறு எதையும் சாப்பிடுவதில்லை. இதனால் அவர் மற்றவர்களை போல சந்தோஷமாக இருப்பதாக தெரிவிக்கிறார். ஆனால் அவர் அருகில் வந்தால் மட்டும் புல் வாசம் அடிக்கும்.
முதலில் அவர் மாடு போல வயலில் முளைத்த புல்லை மட்டும் தின்று பார்த்தார். அது கசப்பாக இருந்தது. அதோடு அவர் உடல்நலனும் பாதிக்கப்பட்டது.
பூச்சி மருந்து அடித்து இருந்ததால், புல்லில் மாசு படிந்து இருப்பது புரிந்தது. இதனால் நான் என் வீட்டுக்கு அருகே உள்ள மலையில் உள்ள செடிகள், தாவரங்கள் ஆகியவற்றின் இலைகளை பறித்து தின்ன தொடங்கினேன் என்கிறார். தொடக்கத்தில் இலை தழைகளுடன் அரிசிச்சோறையும் சேர்த்து சாப்பிட்டேன். பிறகு சோறு சாப்பிடுவதை கைவிட்டேன் என்கிறார்.
இவரால் இப்போது இறைச்சி சாப்பிட முடியாதாம். அதை சாப்பிட்டால் என் உடல்நலம் பாதிக்கப்படுகிறது என்றும் சொல்கிறார்.
இலைதழைகளை சாப்பிடுவதற்கு முன்பு அடிக்கடி உடல் நலம் பாதிக்கும். அடிக்கடி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவேன். உணவு முறையை மாற்றிய பிறகு என் உடலுக்கு ஒரு நாளும் பாதிப்பு ஏற்பட்டதே இல்லை என்று கூறுகிறார். இவர் வலதுகாலில் ஏற்பட்ட கட்டி கூட சிகிச்சை இல்லாமல் மறைந்து விட்டதாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக