4 மார்ச், 2010

ஹந்தானே காட்டுப் பிரதேசத்தில் 500 ஏக்கர் காடு எரிந்து நாசம்
தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம்; 300 இராணுவம், பொலிஸ் அனுப்பி வைப்பு


கண்டி, ஹந்தானே காட்டுப்பகுதியில் நேற்று முன்தினமிரவு திடீரென ஏற்பட்ட தீ காரணமாக சுமார் ஐநூறு ஏக்கர் காடு எரிந்து நாசமாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கண்டி மாவட்ட இணைப்பாளர் மேஜர் எச்.ஆர்.கே.பி. ஹேரத் நேற்றுத் தெரிவித்தார்.

இத் தீ தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், ஹந்தானே காட்டுப்பிர தேசத்தில் நேற்று முன்தினமிரவு 7.10 மணியளவில் திடீரென தீ ஏற்பட்டது. இத்தீயை அணைப்பதற்காக உடனடியாக கண்டி தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர். இருப்பினும் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டதால் உடனடியாக முன்னூறு இராணுவத்தினரும், 25 பொலிஸாரும் ஸ்தலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு தீயைக் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதன் பயனாக நேற்று அதிகாலை 1.00 மணியளவில் தீயைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடிந்தது.

துரிதமாக செயற்பட்டு தீயைக் கட்டுப்படுத்தியதன் பயனாக ரி.என்.எல். தனியார் தொலைக்காட்சியின் தொலைக்காட்சி பரிவர்த்தனை கோபுரம் பாரிய அழிவுக்குள்ளாவது தவிர்க்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக