4 மார்ச், 2010

பொன்சேகா வழக்கு விசாரணை எப்போது?





கொழும்பு :அரசுக்கு எதிராக சதிச் செயல்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இலங்கை முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி சரத்பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, கோர்ட்டில் முறையான விசாரணை நடக்கும் என, இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரசாத் சாமரசிங்கா தெரிவித்துள்ளார்.


அவர் கூறியதாவது:பதவியில் இருந்தபோதே அரசுக்கு எதிராக சரத் பொன்சேகா பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக 25 பேர் சாட்சி சொன்னதின் அடிப்படையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.அதன் பின், கோர்ட்டில் விசாரணை துவங்கும். சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை.இவ்வாறு சாமரசிங்கா தெரிவித்துள்ளார்.இதற்கிடையே, இலங்கையில் அடுத்த மாதம் 8ம் தேதி நடக்கவுள்ள பார்லிமென்ட் தேர்தலில் சரத்பொன்சேகா போட்டியிடும் நிலையில், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என, இலங்கை எதிர்க்கட்சிகள் சார்பில் இணைய தளத்தில் கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டுள்ளது.


சரத்பொன்சேகாவின் மனைவி அனோமா தலைமையில், முன்னாள் தலைமை நீதிபதி சரத் என் சில்வா இதை நேற்று துவக்கி வைத்தார். இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா, மார்க்சிஸ்ட் தலைவர் சோமவன்சா அமரசிங்கா உட்பட பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சரத்பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டும் என கையெழுத்திட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக