4 மார்ச், 2010

தைவானில் இன்று காலை நில நடுக்கம் : தொடர்புகள் துண்டிப்பு


தைவானில் இன்று காலை பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தீவு முழுவதுமே பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் பல இடங்களில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ரிச்டர் அளவில் 6.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தில் பலர் காயமடைந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

தலைநகர் தேபேயிலிருந்து 400 கி.மீ. தொலைவிலுள்ள கௌசியுங் நகரை மையமாகக் கொண்டு 5 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

சிலியின் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கும் தைவான் நிலநடுக்கத்துக்கும் புவியியல் ரீதியாக எந்தத் தொடர்பும் இல்லை என தைவான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக