நுரைச்சோலை மற்றும் சம்பூர் அனல் மின் நிலையங்கள் தவிர வேறு அனல் மின் நிலையங்கள் எதனையும் நிர்மாணிப்பதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சூரிய, காற்று, உயிரியல்வாயு போன்று மாற்று முறைகள் மூலம் மின் உற்பத்தி செய்வது குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சூழல் மாசடைவதை தடுப்பதற்காகவே இவ்வாறு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுற்றாடல் இயற்கை வள அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.
மகாவலி நிலையத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பேசிய அவர் மேலும் கூறியதாவது, அனல் மின் நிலையங்களினால் சூழல்மாசு ஏற்படுவதனாலே இனிமேல் அனல் மின் நிலையங்கள் அமைக்காதிருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச காபன் கோட்டாவின் பிரகாரம் தனி நபருக்கான சேதனக்கழிவு அளவு 2100 ஆகும்.
இலங்கை தனி நபர் ஒருவரின் சேதனக் கழிவு அளவு 600 ஆகும். இரு அனல் மின் நிலையங்கள் அமைக்கப்படுவதன் மூலம் சேதனைக்கழிவு அளவு 400 ஆல் அதிகரிக்கும். மரங்களும் காபனை உறிஞ்சுவதால் இந்தத் தொகை மேலும் குறைவடையும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக