பணத்துக்காக அல்லது தனிப்பட்ட விரோதம் காரணமாக குழந்தைகளைக் கடத்துதல், கொலை செய்தல் போன்ற செயல்கள் உண்மையிலேயே மிகக் கொடூரமானவையா கும். காட்டுமிராண்டித்தனத்தின் உச்சமென்றும் இதனைக் கூறலாம்.
இத்தகைய கொடூர சம்பவமொன்று யாழ்ப்பாணம், சாவகச் சேரியில் இடம்பெற்றிருக்கிறது. சாவகச்சேரி இந்துக் கல்லூ ரியில் பயின்ற திருச்செல்வம் கபில்நாத் என்ற பதினேழு வயது மாணவன் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கப்பம் பெறுபவதற்காகக் கடத்தப்பட்டுள்ளான். இறுதியில் அம் மாணவன் கொலை செய்யப்பட்டு சடலமாகி மீட்கப்பட் டுள்ளான்.
அம்மாணவன் கடத்தப்பட்டதற்கான நோக்கம் பெரும் பணத்தைக் கப்பமாகப் பெறுவதற்காகவென்று விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. வர்த்தகரான தந்தையிடம் மூன்று கோடி ரூபா பணம் பெறுவதற்காகவே அம்மாணவன் கடத் தப்பட்டுள்ளான். கடத்தல்காரரின் நோக்கம் நிறைவேறாமல் போனதால் அம்மாணவன் பரிதாபமாகக் கொலை செய்யப் பட்டுள்ளான்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருசிலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்படி படுகொலைச் சம்பவம் தொடர்பான துப்பு விரைவில் துலங்கிவிடுமென நம்பப்படுகிறது.
இது போன்ற கொடூர சம்பவம் குறித்து மக்கள் விழிப் புணர்வுடன் இருப்பது அவசியம். பணத்துக்காக எந்த வொரு கொடிய காரியத்திலும் ஈடுபடும் காட்டுமிராண் டித்தனமான சுபாவம் சிலருக்குள்ளே இயற்கையாகக் காணப்படுகிறது. இதுபோன்ற வன்முறை குணாம்சம் கொண்டோர் யாழ்ப்பாணத்தில் மட்டுமின்றி எங்குமே இருக்கக் கூடும். இத்தகைய கொடிய குணம் எந்தவொரு இனத்துக்குமோ மதத்துக்குமோ உரியதல்ல.... இவர்கள் இனத்துக்கும் மதத்துக்கும் அப்பாற்பட்ட மிருக இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றே கூற வேண்டும். இக்கொடியவர்களி டமிருந்து சிறார்களைப் பாதுகாப்பதில் பெற்றோர் மத்தியில் அவதானம் தேவை.
பணத்துக்காக சின்னஞ்சிறார்களைக் கடத்திய சம்பவங்கள் நாட்டில் முன்னரும் பரவலாக இடம்பெற்றுள்ளன. இவ் விதம் கடத்தப்பட்ட சிறார்கள் படுகொலை செய்யப்பட்ட பரிதாபங்களும் நிகழ்ந்துள்ளன. அதேசமயம் மேற்படி படுபாதகர்கள் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல் லப்பட்ட சம்பவங்களையும் நாமறிவோம்.
பச்சிளம் பாலகர்களின் உயிரில் விளையாடும் இத்தகைய கயவர்கள் விடயத்தில் முதலில் அவதானமாக இருக்க வேண்டியவர்கள் பெற்றோராவர். பாடசாலை, ரியூஷன் போன்ற இடங்களுக்கு சிறார்களைத் தனியாக அனுப்புவது பாதுகாப்பானதல்ல. நம்பிக்கையான நபர் ஒருவரின் துணையுடன் அனுப்புவதே சிறந்ததாகும். கொடியவர்களிட மிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கு இதுவே உகந்த வழி. பிள்ளைகளின் பாதுகாப்பில் பெற்றோர் உரிய கவனம் செலுத்தாமையே இதுபோன்ற விபரீத சம்பவங்களுக்குக் காரணமாக அமைகிறது.
எமது நாட்டில் சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்கள் தொடர்பாக உரிய சட்ட ஏற்பாடுகள் உள்ளன. சிறுவர் பாது காப்பு தொடர்பில் பொலிஸாரின் கடந்த காலப் பணிகள் மெச்சத்தக்கவை. கடத்தல்காரர்கள் பலர் கடந்த காலத்தில் பொலிஸாரால் கைதாகியமை ஞாபகமிருக்கலாம். இவ்விட யத்தில் பொலிஸார் விசேட கவனமெடுத்து விசாரணை மேற்கொள்கின்றனர்.
எனினும் பெற்றோர் முன்னேற்பாட்டுடன் நடந்துகொள்வதே இங்கு முக்கியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக