29 மார்ச், 2010

தைவானில்96 வயது முதியவர் 30 வயது இளம் பெண்ணை திருமணம்


தைவானில்96 வயது முதியவர் 30 வயது இளம் பெண்ணை திருமணம் செய்ததன் மூலம் அந்நாட்டின் மிகவும் வயதான மணமகன் என்ற பெயரைப் பெற்றுள்ளார்.
தெற்கு தைவானின் டைனன் பகுதியில் உள்ள டாவோயிஸ்ட் கோயிலில் அர்ச்சகராக உள்ளார் லின் சுங். இவர் அண்மையில் சீனாவின் ஹுனன் மாநிலம் மெயின்லேண்ட் பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக தைபேயிலிருந்து வெளிவரும் ஆப்பிள் டெய்லி இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால், நாடெங்கும் இப்போது இவரைப் பற்றிய பேச்சுதான் அடிபடுகிறது. லின் இதுவரை திருமணமே செய்துகொள்ளாமல் தனிமையாக வசித்து வந்தாலும், இரண்டு பிள்ளைகளை தத்து எடுத்துள்ளார்.
இதுகுறித்து லின் கூறுகையில், ள்ள்உன்னுடைய வாழ்க்கைத் துணை ஹுனன் பகுதியில் உள்ளார். அவரை தேடிப் போய் மணந்து கொள் என்று கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, கடவுள் என்னிடம் கூறினார். அதன்படி அவளை மணந்து கொண்டேன். இதுவரை நான் திருமணம் செய்து கொள்ளவே இல்லை. வயதான காலத்தில் எனக்கு ஒரு துணை தேவைப்படுகிறது. எனவே, இப்போது திருமணம் செய்து கொண்டதில் என்ன தவறு?ளிளி என்றார் லின்.
லின்னின் தத்துப் பிள்ளைகளில் ஒருவர், தனது அப்பாவின் திருமணத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதையும் மீறி இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. சீனாவில் உள்ள மனைவியை தைவானுக்கு அழைத்து வர முயற்சியில் லின் ஈடுபட்டுள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டில் சீனா, ஹாங்காங் மற்றும் மக்காவ் பகுதியைச் சேர்ந்தபெண்களை 13 ஆயிரம் தைவானியர்கள் மணந்து கொண்டனர். இது கடந்த ஆண்டில் வெளிநாட்டு பெண்களை மணந்த தைவானியர்களில் 60 சதவீதம் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக