29 மார்ச், 2010

புளொட் தலைவர் த.சித்தார்த்தன், புளொட் வன்னி மாவட்ட அமைப்பாளர் க.சிவநேசன் (பவன்) மகாறம்பைக்குளம் உள்ளிட்ட பிரதேச மக்களுடன் சந்திப்பு





மாவட்டத்தில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களான புளொட் தலைவர் திரு.த.சித்தார்த்தன், புளொட் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் க.சிவநேசன்(பவன்) மற்றும் புளொட் பிரதிநிதிகளும், ஆதரவாளர்களும் இன்று வவுனியா பகுதிகளில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது புளொட் தலைவர் த.சித்தார்த்தன் தலைமையிலான பிரதிநிதிகளும், ஆதரவாளர்களும் அண்ணாநகர் மற்றும் மகாறம்பைக்குளம் பிரதேசங்களுக்குச் சென்று அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.

அண்ணாநகரிலும் மகாறம்பைக்குளத்திலும் அப்பகுதி மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரு கூட்டங்கள் நடைபெற்றன. இங்கு உரையாற்றிய அப்பகுதி கிராமிய அபிவிருத்திச் சங்கம், மாதர் சங்கம், விளையாட்டு கழகங்கள் என்பவற்றின் பிரதிநிதிகள், புளொட் அமைப்பினர் கடந்த காலங்களில் இப்பகுதிகளில் மேற்கொண்டிருந்த வேலைத்திட்டங்களை வரவேற்றுப் பேசியதுடன், கடந்த பத்து வருடகாலமாக புளொட் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் இல்லாததன் காரணத்தினால் 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்பகுதிகளில் எந்தவொரு வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை என்பதையும், எவ்வித அபிவிருத்தியும் செய்யப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினர்.

அத்துடன் இம்முறை பொதுத் தேர்தலின்போது நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்கள் தெரிவுசெய்யப்படுவதன் மூலமே இப்பகுதியின் அபிவிருத்திப் பணிகளையும், இடம்பெயர்ந்த மக்களின் அவலங்களையும் போக்க முடியுமென்றும் தெரிவித்துள்ளனர். இங்கு உரையாற்றிய புளொட் தலைவர் தி.த.சித்தார்த்தன் அவர்கள், கடந்த காலங்களில் புளொட் அமைப்பு இப்பகுதிகளில் மேற்கொண்ட வேலைத்திட்டங்கள் தொடர்பிலும், அபிவிருத்திப் பணிகள் தொடர்பிலும் விளக்கிக் கூறினார். அத்துடன் தொடர்ந்தும் நாம் இப்பகுதிகளில் பல்வேறு அபிவிருத்திப பணிகளை மேற்கொள்ளவுள்ளோம். இதுவே எமது முக்கிய நோக்கமாகும். எனவே மக்கள் அனைவரும் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பூரண ஆதரவை வழங்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இராசேந்திரன்குளம் பகுதிக்கு விஜயம் செய்திருந்த புளொட் அமைப்பின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் க.சிவநேசன் (பவன்) உள்ளிட்ட பிரதிநிதிகள் அப்பகுதி மக்களைச் சந்தித்துள்ளனர். அங்கு அப்பகுதி மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்திலும் புளொட் அமைப்பாளர் க.சிவநேசன் பங்கேற்று உரையாற்றினார். இதன்போது, அப்பகுதியில் கடந்தகாலங்களில் புளொட் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் மற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் எடுத்துக் கூறியதுடன், இப்பணிகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகிறது என்றும், இதற்கு பொதுத் தேர்தலில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களுக்கு மக்கள் பூரண ஆதரவினை வழங்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.

இங்கு உரையாற்றிய அப்பகுதி கிராமிய அபிவிருத்தி சங்கம், மாதர் சங்கம், விளையாட்டு சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள், கடந்த காலங்களில் புளொட் அமைப்பு மேற்கொண்ட பணிகளை நினைவுபடுத்தியதுடன், புளொட் வேட்பாளர்கள் தெரிவுசெய்யப்படுவதன் மூலமே தமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய முடியுமென்பதையும் சுட்டிக்காட்டினர். அத்துடன் எதிர்வரும் பொதுத்தேர்தலில் புளொட் வேட்பாளர்களுக்கு பூரண ஆதரவுவழங்க வேண்டுமென்றும், அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படுவதன் மூலமே கடந்த 10வருட காலமாக மேற்கொள்ளப்படாதிருந்த வேலைத்திட்டங்களையும், அபிவிருத்திகளையும் முன்னெடுக்க முடியுமென்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக