30 மார்ச், 2010

தேர்தல் பாதுகாப்பில் பொலிஸ், முப்படை: 6ம் திகதி முதல் 78,000பேர் கடமையில்




* 58,700 பொலிஸ்

*19,500 முப்படைகள் + அதிரடிப்படை

* 7584 நடமாடும் பாதுகாப்புப் பிரிவு

* 5ம் திகதி நள்ளிரவுடன் பிரசாரம் நிறைவு



பொதுத் தேர்தலை முன்னிட்டு வடக்கு, கிழக்கு உட்பட நாடுமுழுவதும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், மற்றும் முப்படையைச் சேர்ந்த 78,200 பேர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தலா 5 பேர் கொண்ட 7584 நடமாடும் பொலிஸ் பாதுகாப்புப் பிரிவும் இயங்கும் என பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

எதிர்வரும் எட்டாம் திகதி நடைபெறும் பொதுத் தேர்தலை முன்னிட்டு சகல பிரசார நடவடிக்கைகளும் 5 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக கட்அவுட்டுகள், பெனர்கள், போஸ்டர்களை அகற்றும் நடவடிக்கைகள் கடுமையாக கடைப்பிடிக்கப்படும். வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் தாமாகவே முன்வந்து தமது கட்அவுட்டுகள், பெனர்கள், போஸ்டர்களை அகற்றிக்கொள்ள வேண்டும் இல்லையேல் பொலிஸார் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள 9 மாகாணங்களையும் உள்ளடக்கும் விதத்தில் 413 பொலிஸ் நிலையங்களின் பிரிவுகளுக்குள் நிறுவப்படும் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதுடன் தேர்தலின் போது 58,700 பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்படவு ள்ளனர்.

பொலிஸாருக்கு மேலதிகமாக எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் நாடுமுழுவதும் 19,500 முப்படையினரும், விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

நாடு முழுவதும் நீதியும், நியாயமுமான ஒரு தேர்தலை நடத்துவதற்காக சகல நடவடிக்கைகளையும் பொலிஸ் திணைக்களம் எடுத்துள்ளதுடன் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்குச் சாவடிகளுக்கு நேரகாலத்துடன் வாக்களிக்கக்கூடிய விதத்தில் சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள் ளன என்றும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

வாக்குச் சாவடியிலிருந்து 500 மீற்றர் தொலைவிற்குள் வேட்பாளர்களின் கட்அவுட்கள், பெனர்கள், போஸ்டர்கள், அலுவலகங்கள் அமைக்கப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளதுடன் வேட்பாளரின் பிரதான அலுவலகம் ஒன்றில் மட்டுமே கட்டவுட், போஸ்டர், பெனர் வைக்க அனுமதி உண்டு. வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் போது தேவையேற்படும் வாக்குச் சாவடி களுக்கு மேலதிக பாதுகாப்பு வழங்கப்படும்.

வேட்பாளர்கள் அனைவரும் ஏப்ரல் 6 ஆம் திகதி நள்ளிரவுடன் தமது பிரதான கட்சி அலுவலகத்தை தவிர ஏனைய கட்சி அலுவலகங்களை முடிவிடவேண்டும்.

நடமாடும் பாதுகாப்புப் பிரிவில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களும், இரண்டு முப்படை அல்லது விசேட அதிரடிப்படை வீரர்கள் கடமையிலீடு படுத்தப்படுவர்.

நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலைவிட கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. வாக்காளர்கள் அனைவரும் அச்சமின்றி வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்க ளிக்குமாறும், வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் மோதல்களை ஏற்படுத்திக் கொள்ளாமல் நீதியான, நியா யமான தேர்தலை நடத்த ஒத்துழைப்பு வழங்குமாறும் பொலிஸ் மா அதிபர் கேட்டுக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக