19 நவம்பர், 2009

18 குடும்பங்கள் மீள்குடியேற்றத்திற்காக மட்டக்களப்பு அனுப்பி வைப்பு



யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து யாழ் மாவட்டத்திலுள்ள இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 18 குடும்ப உறுப்பினர்கள் 51 பேர் இன்று கிளிநொச்சி ஊடாக மீள் குடியேற்றத்தின் நிமித்தம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சிவில் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளினால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இன்று காலை 3 பஸ் வண்டிகளில் மட்டக்களப்பை வந்தடைந்த இக்குடும்பங்கள் சிங்கள மகா வித்தியாலயத்தில் சிவில் மற்றும் பாதுகாப்பு தரப்பினரால் விபரங்கள் பதிவு செய்யப்பட்டு சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உறவினர்களிடம் கையளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனைத் தவிர வவுனியா மெனிக் பாம் இடைத்தங்கல் முகாமிலிருந்தும் 16 குடும்பங்களைச் சேர்ந்த 46 பேர் இன்று மாலை மட்டக்களப்பிற்கு அழைத்து வரப்பட்டு மீள குடியேற்றத்தின் நிமித்தம் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட செயலக அதிகாரிகளின் தகவல்களின் படி வவுனியா நிவாரணக் கிரமங்களிலிருந்து இதுவரை கடந்த ஆகஸ்ட் 10 முதல் இன்று வரை 5 தொகுதிகளில் 863 குடும்பங்களைச் சேர்ந்த 2398 பேர் மீள் குடியேற்றத்திற்காக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அதே வேளை யாழ் மாவட்ட நிவாரணக் கிராமங்களிலிருந்து முதல் தடவையாக இன்று 18 குடும்பங்களைச் சேர்ந்த 51 பேர் அனுப்பி வைக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக