19 நவம்பர், 2009

அகதிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டோருக்கு அடைக்கலம் வழங்க ஆஸி. இணக்கம்

இந்தோனேஷியாவில் கடலில் தரித்து நிற்கும் 'ஓசியானிக் வைகிங்' கப்பலில் உள்ளவர்களில் அகதிகள் என ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களுக்கு முதலில் ஆஸ்திரேலியா அடைக்கலம் அளிக்கவுள்ளது.

ஏனையோர் குறித்து விரைவாக ஆராய்ந்து அவர்கள் அகதிகள் என உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் உடனடியாக அடைக்கலம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'ஓசியானிக் வைகிங்' கப்பலிலிருந்து இலங்கையர்கள் 78 பேரும் வெளியேறி, கரையிறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த வெள்ளிக்கிழமை 22 பேர் கப்பலைவிட்டு இறங்கி இந்தோனேஷியக் கரையை அடைந்துள்ளனர். நேற்று புதன்கிழமை எஞ்சியிருந்த ஐந்து குழந்தைகள், ஐந்து பெண்கள் உட்பட 56 பேரும் கப்பலிலிருந்து கரை இறங்கியுள்ளனர்.

இதன் பின்னர் இவர்கள் இந்தோனேஷியாவின் 'டன்யுங் பினாங்' தடுப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

'ஓசியானிக் வைகிங்' கிலிருந்து இறங்கியவர்களில் உள்ள குழந்தைகளும் பெண்களும் தனியான இடமொன்றில் தங்க வைக்கப்படுவார்கள் என ஆஸ்திரேலியப் பிரதமர் ரூட் தெரிவித்துள்ளார். எனினும், இந்தோனேஷிய அதிகாரிகள் இதனை நிராகரித்துள்ளனர்.

'ஓசியானிக் வைகிங்' கப்பலிலிருந்து இறங்கிய 78 பேரில் அகதிகள் என ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களுக்கு முதலில் ஆஸ்திரேலியா அடைக்கலம் அளிக்கவுள்ளது. இது அடுத்த சில வாரங்களில் இடம்பெறலாம் எனத் தெரிகிறது.

ஏனையவர்கள் குறித்து விரைவாக ஆராய்ந்து அவர்கள் அகதிகள் என உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் உடனடியாக அடைக்கலம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக