19 நவம்பர், 2009

புதிய 1,000 ரூபா நாணயத்தாள் பிரசார சுவரொட்டியாகும்- ஐ.தே.க. குற்றச்சாட்டு



மஹிந்த ராஜபக்ஷவின் புகைப்படத்துடன் வெளியிடப்பட்டுள்ள ஆயிரம் ரூபா தாள், நாணயத் தாள் அல்ல. அது ஒரு பிரசார சுவரொட்டியாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலேயே ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,நாட்டு மக்கள் இன்று புதிய நாணயத்தாளை கோரவில்லை. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கேற்ப சம்பள உயர்வையும் வாழ வழியையுமே கேட்கின்றனர்.

இலங்கை மத்திய வங்கியின் நாணயங்கள் தொடர்பான சட்டங்களை மதிக்காது இந்த நாணயத்தாள் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப வெளியிடப்பட்டுள்ளது. அத்தோடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுகின்றார். எனவே கைகளை உயர்த்திக் கொண்டு தேர்தல் மேடைகளில் தோன்றுவதைப் போன்று நாணயத் தாள் வெளியிட்டுள்ளமையானது பிழையான அணுகுமுறையாகும். கித்சிறி மஞ்சநாயக்கமே.மா. சபை ஐ.தே. கட்சி உறுப்பினர்சர்வாதிகார ஆட்சியாளர்கள் ஆட்சி புரியும் நாடுகளிலேயே இவ்வாறான நாணயத்தாள்கள் வெளியிடப்படும். இன்று எமது நாட்டிலும் இந்த நாணயத் தாளானது ஆட்சியாளர்கள் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்றனர் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்று இங்கு கருத்து தெரிவித்த ஐ.தே.க.வின் மேல் மாகாண சபை உறுப்பினர் கித்சிறி மஞ்சநாயக்க தெரிவித்தார்.

நாணயத் தாள்களில் அரச தலைவரின் உத்தியோகபூர்வ புகைப்படத்தை அச்சிடலாம். ஆனால் கைகளை உயர்த்திய விதத்திலான புகைப்படம் தேர்தல் பிரசாரத்தையே காட்டி நிற்கின்றது.

அத்தோடு இத்தாளின் முன்புறம் நீலம், சிவப்பு கோடுகள் போடப்பட்டுள்ளமை ஆளும் கட்சியை குறிப்பிடுகின்றது. படையினருக்கு கௌரவம் அளிக்கின்றோம் என்ற பிரசாரத்தோடு தேர்தல் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. படையினரை கௌரவிக்கும் புகைப்படம் நாணயத் தாளின் பின்புறமே அச்சிடப்பட்டுள்ளது என்றும் கித்சிறி மஞ்சநாயக்க தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக