7 நவம்பர், 2009

கிளிநொச்சியில் முதலாவதாக 1000 பேர் வெள்ளியன்று மீள்குடியமர்வு



- கிளிநொச்சி மாவட்டத்தில் முதன் முறையாக மீள்குடியேற்றத்திற்காக ஆயிரம் பேர் அந்தப் பகுதிக்கு நேற்று வெள்ளிக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திருமதி எமில்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் நாச்சிக்குடா, முழங்காவில், ஜெயபுரம் வடக்கு, ஜெயபுரம் தெற்கு ஆகிய பிரதேசங்களில் இவர்கள் மீளக்குடியமர்த்தப்படுவர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் இடைத்தங்கல் முகாம்களில் இவர்கள் தங்க வைக்கப்பட்டு, கண்ணிவெடிகள் பற்றிய விழிப்புணர்வு அறிவூட்டப்பட்டப் பின்னர் இவர்கள் அவர்களது சொந்தக் காணிகளில் குடியேறுவதற்கு அனுமதிக்கப்படுவர் என்றும் கிளிநொச்சி மாவட்ட பதில் அரச அதிபர் திருமதி எமில்டா சுகுமார் தெரிவித்தார்.

விடுதலைப்புலிகள் நிலைகொண்டிருந்த பல இடங்களிலும் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட இடங்களிலேயே இடம்பெயர்ந்த மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டு வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

எனினும் மீள்குடியேறும் மக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்குக் கண்ணிவெடி அபாயம் பற்றி அறிவூட்ட வேண்டியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொட்டும் மழையின் மத்தியிலும் திட்டமிட்டபடி கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக