7 நவம்பர், 2009

500 ச. கி. மீற்றரில் 1.5 மில். கண்ணிவெடிகள்; 40 ச. கி. மீற்றர் படையினரால் சுத்திகரிப்பு

யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா பகுதிகளில் சுமார் 500 சதுர கிலோ மீற்றர் பகுதிகளில் 1.5 மில்லியன் மிதிவெடிகள், நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 40 சதுர கிலோ மீற்றர் பகுதியில் மிதிவெடிகளை படையினர் அகற்றியுள்ளனர் என பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணையை சபையில் சமர்ப்பித்து பேசும் பேதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சபாநாயகர் வி. ஜே. மு. லொக்குபண்டார தலைமையில் நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் அவசரகாலச் சட்டம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது.

பிரதமர் தொடர்ந்தும் உரையாற் றுகையில் :- எந்தவொரு நாட்டிலும் ஆளும் கட்சி வெற்றிகளை பெற்றுக் கொள்ளும் போது எதிர்க்கட்சிக்கு பொறாமை ஏற்படுவதுண்டு. இங்கும் அரசியல் ரீதியான பொறாமையே ஏற்பட்டுள்ளது. எனினும் இன்று நாம் எமது நாட்டின் முன்னேற்றத்தையும், நாட்டை கட்டியெழுப்புவது போன்ற சவால்களுக்கே முகம்கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

ஒரு வீட்டின் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமாயின் வீட்டிலுள்ளவர்கள் மத்தியில் ஒற்றுமை நிலவ வேண்டும். அப்போதுதான் தத்தமது தேவைகளை ஒழுங்காக நிறைவேற்றிக்கொள்ள முடியும். முதலில் இதனை நாம் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.

வடக்கிலுள்ள மக்கள் இன்று அதனை புரிந்துகொண்டுள்ளார்கள்.

நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்களின் உண்மை நிலையை சர்வதேசத்துக்கு எடுத்துக்கூறியும் இருக்கிறோம். அதற்கு நாம் பின்னிற்கவில்லை.

வெளி உலகு தெரியாமல் ஆயுதம் ஏந்தி போராடிய சிறுவர், சிறுமியர்கள் இன்று பாடப் புத்தகங்களை ஏந்திய வாறு பாடசாலைக்கு செல்கின்றனர். எதிர்காலம் சிறப்பானதாக இருக்கும் என்பதற்கு இது எடுத்துக்காட்டாக திகழவில்லையா?

வடக்கின் மீள்குடியேற்றம், கல்வி நடவடிக்கைகள் என்பவற்றுக்கு இன்று தடையாக இருப்பது பயங்கரவாதிகளால் புதைக்கப்பட்ட மரணப் பொறிகளே.

அபிவிருத்தி பணிகளுக்கென பெருந் தொகையான இயந்திராதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. பயங்கரவாத வெற்றிக்கு பின்னர் அரசாங்கம் பெற்ற அடுத்த வெற்றி இவை. எனினும், உண் மையான வெற்றியையடைய இன்னும் நெடுந்தூரம் பய ணிக்க வேண்டி யிருக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக