இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பித்தது நியாயமானது
நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதில் அவசரம் கூடாது
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்பதில் அவசரம் காட்டக் கூடாது. அந்த பதவிக்கான அதிகாரங்களை மீள் பரிசீலனை செய்து தேவையேற்படும் இடங்களில் மாற்றங்களை மேற்கொள்வதே உசிதமானது ஆனால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை தொடரவேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே. என். சொக்ஸி நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் கூறினார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இடைக்கால கணக்கறிக்கை விவாதத்தில் பேசியபோதே அவர் இவ்வாறு கூறினார். இடைக்கால கணக்கறிக்கையை சமர்ப்பித்தமை ஜனநாயகமானதும் முறையானதுமான ஒரு நடவடிக்கையாகும் என்று குறிப்பிட்ட சொக்ஸி, இவ்வாறு இடைக்கால கணக்கறிக்கையை சமர்ப்பித்ததன்மூலம் அடுத்த பொதுத் தேர்தலில் தெரிவாகும் புதிய அரசாங்கம் தனது நிதித் திட்டங்களை சுயமாகவே மேற்கொள்ள வசதி கிடைக்கும் என்றும் கூறினார்.
வரவு-செலவு திட்டமொன்றை சம ர்ப்பித்து புதிய அரசாங்கமொன்றுக்கு கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவது சரி யானதல்ல என்று கருதுவதாக அவர் மேலும் கூறினார்.
அரசாங்கமொன்று ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் அடுத்த வருடம் முழுவதுக்குமான நிதி ஆலோசனைகளை சமர்ப்பிப்பது சாதாரண நடைமுறையாகும். இது தான் வரவு-செலவு திட்டமாகும் என்றும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் சொக்ஸி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக