12 நவம்பர், 2009

அவசரகால சட்டவிதிகளை உடனடியாக நீக்கமுடியாது- அமைச்சர் யாப்பா



முடிவடைந்து விட்டது என்பதற்கõக, உடனடியாக அவசரகாலச் சட்டத்தை நீக்கிவிட முடியாது. அதற்கு மேலும் காலம் தேவைப்படுகின்றது. பயங்கரவாதத்தின் எச்சங்கள் இன்னும் நாட்டில் காணப்படுகின்றன. அவற்றை அடையாளம் காணவேண்டியுள்ளது. எனவே, பகுதி பகுதியாகவே அவசரகாலச் சட்ட விதிகளைத் தளர்த்த முடியும் என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். ஊடகத்துறை அமைச்சில் நேற்று புதன்கிழமை காலை நடைபெற்ற வாராந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது: .

யுத்தம் முடிவடைந்து நாட்டில் அமைதி நிலை திரும்பியுள்ளது. ஆனால், நாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகளை எந்த விதத்திலும் மாற்றமுடியாது. பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டிருப்பினும், அதன் எச்சங்கள் தொடர்ந்தும் நாட்டில் உள்ளன. அவற்றை அடையாளம் கண்டு முடக்க வேண்டும். யுத்தம் முடிந்த பின்னர் கூட நாட்டில் பல கைதுச் சம்பவங்கள் இடம்பெற்றமை உங்களுக்குத் தெரியும். ஜனாதிபதியை கொலைசெய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சியில் பேரில் சிலர் கைதுசெய்யப்பட்டனர். இதில் ஒரு உதவி பொலிஸ் அத்தியட்சரும் உள்ளடங்கியிருந்தமை உங்களுக்குத் தெரியும். எனவே, இவற்றை அடையாளம் காணவும், பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தவும், அவசரகாலச் சட்டவிதிகள் அவசியமாகவுள்ளன. எனினும், அதனை பகுதி பகுதியாகத் தளர்த்தலாம் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கின்றோம். ஆனால், அவசரகாலச் சட்டத்தை உடனே நீக்கிவிட முடியாது. கைதுகள் மற்றும் சோதனைகள், விசாரணைகள் என்பனவற்றுக்கு அவசரகால விதிகள் தேவையாகும். .

தற்போது அனைத்து எம்.பி.மார்களுக்கும் வட பகுதிக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி கோரப்பட்டால் அதற்கு ஏற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். அவசரகாலச் சட்டத்தை நீக்குமாறு கோருபவர்கள், நாட்டில் நாளை ஏதாவது ஒரு அசம்பாவிதம் இடம்பெறின் என்ன கூறுவார்கள்? அதற்கு அரசாங்கமே பொறுப்புக்கூறவேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக