12 நவம்பர், 2009

சீருடையை கழற்றிய பின்னரே முடிவை அறிவிப்பேன் - பொன்சேகா


இராணுவப் பதவியில் இருப்பதாகவும் சீருடையை கழற்றிய பின்னரே தமது முடிவை அறிவிப்பதாகவும் கூட்டுப்படைகளின் பிரதானி சரத் பொன்சேகா களனி விகாரையில் தெரிவித்துள்ளார்.

விசேட வழிபாட்டுக்கென களனி விகாரைக்கு இன்று மாலை சென்ற அவர் அங்கு ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதலளிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் எமது இணைத்திற்கு தெரிவித்தனர்.

“இதுவரையும் தாய் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் செயற்பட்டேன். இனியும் அவ்வாறுதான் செயற்படுவேன். அரசாங்கத்தின் மீது எனக்கு எந்த வெறுப்பும் இல்லை. எனது சாதாரண பதவிக்காலத்திலும் பார்க்க நான்கு வருடங்கள் அதிகமாக சேவை செய்துள்ளேன்.

நான் மிகுந்த சந்தோசத்துடனேயே எனது பதவியிலிருந்து ஓய்வு பெறத் தீர்மானித்தேன். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இதுவரை எதுவும் சொல்ல முடியாது. இந்த மாத இறுதியுடன் நான் ஓய்வுபெறவுள்ளதாக ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளேன். அதன் பின்னரேயே எனது எதிர்கால நடவடிக்கைகள் குறித்துக் கூற முடியும் எனக் கூறியுள்ளார்.

சரத் பொன்சேகா

சரத் பொன்சேகா என்றழைக்கப்படும் கார்டிஹேவா சரத் சந்திரலால் பொன்சேகா இலங்கை பாதுகாப்புத் துறையில் முப்படைகளின் தலைமை அதிகாரி எனும் அதிகாரிகள் தரத்திலான உயர் பதவிக்கு ஜனாதிபதியினால் தேர்ந்தெடுக்கப்பட்டவராவார்.

இலங்கை இராணுவத்தின் வரலாற்றில் வெற்றித் தளபதி என வர்ணிக்கப்படும் சரத் பொன்சேகா விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை வெற்றிகொள்ள பெரும் பங்காற்றியிருந்தார்.

அம்பலங்கொடை தர்மாசோக்க கல்லூரியிலும் கொழும்பு ஆனந்தா கல்லூரியிலும் கல்வி கற்ற பொன்சேகா சிறந்த விளையாட்டு வீரராக திகழ்ந்துள்ளார். இலங்கை இராணுவத்தில் 1970 ஆம் ஆண்டு பெப்ரவரி 5ஆம் திகதி இணைந்த சரத் பொன்சேகா 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் 18ஆவது தளபதியாக நியமிக்கப்பட்டார்.

2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்கதலுக்கு உள்ளாகி பின்னர் ஐ{லை மாதம் தமது கடமைக்குத் திரும்பினார். பதவிக்காலத்தில் "பலவேகய", "ஜயசிக்குரு" ஆகிய இராணுவ நடவடிக்கைகளை சிறப்பாக செயற்படுத்திய பின்னர் இராணுவத்தின் ஒவ்வொரு உயர் பதவிகளில் கடமையாற்றினார்.

தனது தலைமையில் இராணுவத்தினருக்கு சிறப்பான தந்திரோபாயங்களை வழங்கி, வெற்றிபெறச் செய்தால் இவ்வாண்டு ஐ{லை மாதம் 15ஆம் திகதி விசேட சட்டத்தின் பிரகாரம் கூட்டுப் படைகளின் பிரதானியாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டார்
பிரான்ஸ் அமைப்பாளர் பிரபாவுக்கு புளொட் தலைவர் சித்தார்த்தன் அஞ்சலி!

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அமைப்பின் பிரான்ஸ் அமைப்பாளர்
தோழர் பிரபாவின் இறுதி நிகழ்வுகள் இன்று பிரான்ஸில் நடைபெறுகின்றது. இதானைமுன்னிட்டு கொழும்பு பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் தலைவர்சித்தார்த்தன் உள்ளிட்ட கழக உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்துஅஞ்சலி கூட்டம் ஒன்றும் கொழும்பு அலுவலக பொறுப்பாளர் பற்றிக்தலைமையில் அஞ்சலி கூட்டம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
__________________________________________________________________
































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக