அம்பாறையில் விடுதலைப் புலி பெண் உறுப்பினரொருவரும் அவருக்கு உதவிய மாணவரும் கைது
மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் விடுதலைப் புலி பெண் உறுப்பினரொருவரும் அவருக்கு தஞ்சமளித்து உதவியதாகக் கூறப்படும் பல்கலைக்கழக மாணவனும் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யோகபுரம் மல்லாவியைச் சேர்ந்த யாமினி எனப்படும் இந்திரராஜா பவரீட்டா (வயது 26) என்ற விடுதலைப் புலி உறுப்பினரும் அவருக்கு உதவியதாகக் கூறப்படும் தென். கிழக்கு பல்கலைக்கழகத்தின் 3 ஆம் ஆண்டு மாணவன் ரி.வினோதரன் என்பவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தம்பிலுவிலைச் சேர்ந்த குறித்த மாணவனிடம் கடந்த ஏப்ரில் மாதம் 26 ஆம் திகதி விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட தளபதிகளின் ஒருவரான நகுலன் குறித்த பெண் விடுதலைப் புலி உறுப்பினரை முல்லைத்தீவிற்கு அனுப்பி வைக்குமாறு கூறி ஒப்படைத்ததாகவும்.
இதனையடுத்து ஆலையடிவேம்பில் இப்பெண் தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும் தமது விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளதாக இக்கைது தொடர்பாக பாதுகாப்பு தரப்பு கூறுகின்றது.இரண்டு மாதங்களுக்கு முன்னர் இது தொடர்பாக புலனாய்வுத் துறையினருக்கு தகவல்கள் கிடைத்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.
சந்தேக நபர்கள் இருவரும் நீதிமன்ற அனுமதி பெற்று அவசர கால சட்ட விதிகளின் கீழ் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக